LATEST NEWS
மகள் மற்றும் கணவருடன் வெளிநாடு சுற்றுலா சென்ற சரண்யா பொன்வண்ணன்… வெளியான அழகிய புகைப்படங்கள்..!!
தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாகி தற்போது பேவரட் அம்மாவாக வளம் வருபவர் நடிகை சரண்யா பொன்வண்ணன்.
இவர் 1987 ஆம் ஆண்டு மணிரத்தினம் இயக்கிய நாயகன் என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.
எட்டு வருடங்களாக ஹீரோயினியாக நடித்து வந்த இவர் 2003 ஆம் ஆண்டு முதல் அம்மா மற்றும் அண்ணி வேடங்களில் நடித்து வருகிறார்.
தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் மலையாளம் படங்களிலும் இவர் நடித்துள்ளார்.
இவர் கடந்த 1995 ஆம் ஆண்டு தன்னுடன் நடித்த பொன்வண்ணனை திருமணம் செய்து கொண்டார்.
இவர்களுக்கு பிரியதர்ஷினி மற்றும் சாந்தினி என்ற இரண்டு மகள்கள் உள்ளனர். இவருடைய முதல் மகளுக்கு திருமணம் ஆகி விட்ட நிலையில் இரண்டாவது மகள் கல்லூரி படித்து வருகிறார்.
இவர் படித்து ஒரு சயின்டிஸ்ட் ஆக வேண்டும் என்பதுதான் சரண்யா பொன்வண்ணனின் ஆசை.
நடிப்பு ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் சரண்யா பொன்வண்ணன் விருகம்பாக்கத்தில் உள்ள தன் வீட்டில் ஒரு பேஷன் டிசைனிங் ஸ்கூல் வைத்துள்ளார்.
படங்களில் நடித்துக் கொண்டே இந்த பேஷன் டிசைனிங் ஸ்கூலில் 300 பேருக்கு பேஷன் டிசைனிங் மற்றும் ஸ்டிச்சிங் சொல்லிக் கொடுத்து வருகிறார்.
இந்த ஃபேஷன் டிசைனிங் ஸ்கூல் தொடங்கி கிட்டதட்ட நான்கு வருடம் நிறைவடைந்து விட்டது.
இந்நிலையில் சரண்யா பொன்வண்ணன் தனது குடும்பத்துடன் நெதர்லாந்து சுற்றுலா சென்றுள்ள நிலையில் அது தொடர்பான புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.
அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
