CINEMA
60 ஆண்டுகாலப் பாரம்பரியத்தை ஒற்றை ஆளாக உடைத்த விஜய்…என் பேரனே விஜய்க்குத்தான் ஓட்டு போட்டான்…இளைய தலைமுறை எடுத்த அதிரடி முடிவு…தவெக தம்பிகளை உசுப்பேத்திய சிவக்குமாரின் வைரல் ஸ்பீச்…!
கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாகத் தமிழக அரசியல் களத்தை ஆக்கிரமித்திருந்த திமுக, அதிமுக ஆகிய இரு துருவ அரசியலின் நீண்ட நெடிய பாரம்பரியத்தை உடைத்து, தமிழகத்தின் புதிய முதலமைச்சராகப் பதவியேற்றுள்ளார் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் சி. ஜோசப் விஜய். நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தம் 108 தொகுதிகளில் தனித்து வென்ற தவெக, விசிக, காங்கிரஸ், இடதுசாரிகள் மற்றும் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆகிய கட்சிகளின் ஆதரவோடு கூட்டணி ஆட்சியை அமைத்துள்ளது. பதவியேற்ற சில வாரங்களிலேயே முந்தைய ஆட்சிக் காலத்தின் மக்கள் நலத் திட்டங்கள் தொய்வின்றித் தொடர விஜய் ஏற்பாடு செய்திருந்தாலும், அவரது தேர்தல் வாக்குறுதிகள் இன்னும் செயல்பாட்டுக்கு வராதது மற்றும் செய்தியாளர்களைச் சந்திக்க அவர் தயங்குவது போன்ற சில ஆரம்பக்கால விமர்சனங்களையும் புதிய அரசு சந்தித்து வருகிறது.
இந்நிலையில், செய்தியாளர்களைச் சந்தித்த மூத்த நடிகரும், சூர்யாவின் தந்தையுமான சிவக்குமார், தமிழக அரசியல் மாற்றம் குறித்தும் தவெகவின் வெற்றி குறித்தும் மிகவும் ஓப்பனாகப் பேசியுள்ளார். அவர் கூறுகையில், “விஜய் அரசியலுக்கு வந்ததை நினைத்து நாம் சந்தோஷப்படலாம். அவர் வித்தியாசமாக ஏதேனும் செய்வார் என்று நம்பித்தானே மக்கள் வாக்களித்திருக்கிறார்கள். மாற்றம் என்பது யாராலும் தடுக்க முடியாத ஒரு விஷயம். 1954-ல் இருந்து 9 வருடங்கள் தமிழகத்தைச் சிறப்பான முறையில் ஆட்சி செய்த பெருந்தலைவர் காமராஜரையே, அவர் தேவையில்லை மாற்றம் வேண்டும் என்று கூறி இந்த நாட்டு மக்கள் தோற்கடித்தார்கள். யார் வேண்டும், வேண்டாம் என்பதை முடிவு செய்யும் உச்சக்கட்ட நீதிபதிகள் மக்களே தான்” என்று எதார்த்த அரசியலை சுட்டிக்காட்டினார்.
தொடர்ந்து சூர்யா கார்த்தி குடும்பத்திலிருந்து விஜய்க்கு விழுந்த வாக்குகள் குறித்துப் பகிர்ந்துகொண்ட சிவக்குமார், “இப்போது திமுக, அதிமுக வேண்டாம் என்றுதானே மக்கள் விஜய்க்கு வாக்களித்திருக்கிறார்கள். கிட்டத்தட்ட 90 சதவீத இளைய தலைமுறையினர் எந்தவொரு பணமும் வாங்காமல் நேர்மையாக ஓட்டுப் போட்டிருக்கிறார்கள்; பெண்களும் பெருமளவில் வாக்களித்துள்ளனர். ஏன், எனது பேரனே (சூர்யாவின் மகன்) விஜய்க்குத்தான் வாக்களித்திருக்கிறான். அவன்தானே அடுத்த தலைமுறை, அதை நாம் எப்படித் தவறு என்று சொல்ல முடியும்? எனவே, புதிய முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள விஜய் மக்களுக்கு நிச்சயம் நல்லது செய்வார் என்று நாம் நம்புவோம்” எனத் தெரிவித்துள்ளார். சூர்யா குடும்பத்திலிருந்து விஜய்க்கு விழுந்த வாக்கு விவரத்தை சிவக்குமாரே பொதுவெளியில் உடைத்திருப்பது தற்போது சோஷியல் மீடியாவில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
