CINEMA
அஜித்தின் வீட்டில் நடந்த பெரும் சோகம்…தாயை இழந்த துயரம்…”என் அருமை நண்பர் அஜித்துக்கு…ஓடோடி வந்த நண்பர் விஜய்! உருகிப்போன கோலிவுட்…!
திரையுலகின் முன்னணி நட்சத்திரமும், புகழ்பெற்ற கார் பந்தய வீரருமான நடிகர் அஜித்குமாரின் தாயார் மோகினி மணி (84) வயது மூப்பு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக இன்று காலமானார். இத்துயரச் செய்தி திரையுலகினரையும், ரசிகர்களையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. கடந்த 2023-ம் ஆண்டு அஜித்தின் தந்தை பி.எஸ்.மணி காலமான நிலையில், அடுத்த 3 ஆண்டுகளில் அஜித் தனது தாயாரையும் இழந்துள்ளார். சென்னை பாலவாக்கத்தில் உள்ள அஜித்தின் இல்லத்தில் மறைந்த மோகினி மணியின் இறுதிச் சடங்குகள் இன்று நடைபெற உள்ள சூழலில், திரையுலகப் பிரமுகர்கள் பலர் நேரில் சென்று தங்களது அஞ்சலியைச் செலுத்தி வருகின்றனர்.
அஜித்தின் தாயார் மறைவுக்குத் தமிழக முதல்வரும், அஜித்தின் நெருங்கிய நண்பருமான விஜய் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் உருக்கமான இரங்கலைப் பதிவு செய்துள்ளார். அதில், “அருமை நண்பர் திரு. அஜித் குமார் அவர்களின் தாயார் திருமதி மோகினி அம்மையார் மறைவுச் செய்தி கேட்டு மிகுந்த வேதனை அடைந்தேன். வாழ்வில் அனைத்து நிலைகளிலும் அரணாக இருந்து அரவணைத்த தாயாரை இழந்து வாடும் நண்பர் அஜித்குமாருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என ஆறுதல் கூறியுள்ளார். கோட் சூட்டிற்குப் பதிலாகப் பட்டு வேஷ்டி சட்டையுடன் வலம் வரும் முதல்வர் விஜய்யின் இந்த நட்பு ரீதியிலான இரங்கல் பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.
அதேபோல், முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், “உயிர்கொடுத்து, தான் உயரங்கள் தொட்டதைப் பார்த்து மகிழ்ச்சி கொண்ட அன்னையினை இழந்து வாடும் அன்புச் சகோதரர் அஜித்குமாரைத் தேற்ற என்னிடம் வார்த்தைகள் இல்லை; அன்னையுடனான அழகிய தருணங்களே இந்தத் துயரில் அவர் மீளத் துணைநிற்க விழைகிறேன்” என்று நெகிழ்ச்சியோடு குறிப்பிட்டுள்ளார். அவர்களைத் தொடர்ந்து அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமியும், பாசமிகு தாயாரை இழந்து வாடும் சகோதரர் அஜித்குமாருக்கும் அவரது குடும்பத்தாருக்கும் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து, அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாறப் பிரார்த்திப்பதாகக் கூறியுள்ளார்.
