கள்ளக்காதலுக்குப் பலியான 6 வயதுப் பிஞ்சு உயிர்…!காதலனுடன் சேர்ந்து பெற்ற மகளைக் கழுத்தை நெரித்துக் கொன்ற தாய்…. பகீர் பின்னணி…!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

கள்ளக்காதலுக்குப் பலியான 6 வயதுப் பிஞ்சு உயிர்…!காதலனுடன் சேர்ந்து பெற்ற மகளைக் கழுத்தை நெரித்துக் கொன்ற தாய்…. பகீர் பின்னணி…!!

Published

on

கர்நாடக மாநிலம் பெங்களூரு சீகேஹள்ளி பகுதியில் வசித்து வந்த பிரியங்கா என்ற பெண், தனது கல்லூரி நண்பரான மோகனுடன் ஏற்பட்ட கள்ளக்காதல் காரணமாக, கணவர் பிரவீனை பிரிந்து தனது 6 வயது மகள் வெண்ணிலாவை மட்டும் அழைத்துக் கொண்டு தனியாக வாழ்ந்து வந்துள்ளார். கடந்த மார்ச் மாதம் 24-ஆம் தேதி, உணவகத்தில் பிரியாணி மற்றும் ஐஸ்கிரீம் வாங்கி கொடுத்துவிட்டு ஏசி காரில் தூங்க வைத்தபோது மகள் திடீரென இறந்துவிட்டதாக பிரியங்கா நாடகமாடியுள்ளார்.

மனைவியின் நடத்தையில் சந்தேகமடைந்த கணவர் பிரவீன், சிறுமியின் பிரேத பரிசோதனை அறிக்கையை வெளிநாட்டில் உள்ள மருத்துவரான தனது உறவினருக்கு அனுப்பியபோது, அந்த குழந்தை பிரியாணி சாப்பிட்டதால் இறக்கவில்லை, கழுத்து நெரித்துக் கொலை செய்யப்பட்டுள்ளது என்ற அதிர்ச்சி உண்மை வெளிவந்தது.

Advertisement

இதனைக் கேட்டு உறைந்துபோன பிரவீன், 3 மாதங்களுக்குப் பிறகு காடுகோடி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அதில், மகள் வெண்ணிலா கருப்பாக இருந்ததாலும், தங்களின் கள்ளக்காதலுக்கு முட்டுக்கட்டையாக இருந்ததாலும் மோகனுடன் சேர்ந்து பெற்ற தாயே அவளைக் கொடூரமாகக் கொன்றது அம்பலமானது.

இதையடுத்து, கள்ளக்காதலன் மோகனைக் காவல் துறையினர் அதிரடியாகக் கைது செய்துள்ள நிலையில், பயந்துபோய் தலைமறைவாகியுள்ள கொடூரத் தாய் பிரியங்காவை போலீசார் வலைவீசித் தேடி வருகின்றனர். தங்களின் உல்லாச வாழ்க்கைக்கு இடையூறாக இருந்த பெற்ற மகளையே தாய் கொன்ற சம்பவம் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in