CINEMA
அவனோட 7 வருஷம் குடும்பம் நடத்தினேன்…நாஞ்சில் விஜயனுக்கு காத்திருக்கும் செக்… கமிஷனர் ஆபீசில் வி.ஜே.வைசு கொடுத்த பரபரப்பு புகார்…பின்னணியில் இருக்கும் அந்த 3 லட்சம்…!
சின்னத்திரை காமெடி நடிகர் நாஞ்சில் விஜயனுக்கும், திருநங்கை வி.ஜே.வைசுவுக்கும் இடையே நீண்ட நாட்களாக நீடித்து வரும் பணப் பிரச்சினை மற்றும் தனிப்பட்ட மோதல் விவகாரம் தற்போது மீண்டும் பூதாகரமாக வெடித்துள்ளது. ஏற்கனவே இவர்களுக்குள் பலமுறை பஞ்சாயத்துக்கள் நடந்த நிலையில், தற்போது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நாஞ்சில் விஜயனுக்கு எதிராக வி.ஜே.வைசு மீண்டும் ஒரு புதிய புகாரை அளித்துள்ளார். புகார் அளித்த பின் செய்தியாளர்களைச் சந்தித்த வி.ஜே.வைசு, நாஞ்சில் விஜயன் மீது அடுக்கடுக்கான பகிரங்கக் குற்றச்சாட்டுகளைச் சுமத்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
செய்தியாளர்களிடம் ஆவேசமாகப் பேசிய வி.ஜே.வைசு, “நாஞ்சில் விஜயனை எனக்குக் கடந்த 16 வருடங்களாகத் தெரியும், அவனுடன் நான் 7 வருடங்கள் குடும்பம் நடத்தியுள்ளேன்; அவன் ஒரு பக்கா ஃபிராடு” என்று சாடினார். மேலும், தன்னிடம் வாங்கிய 3 லட்சம் ரூபாய் பணத்தைத் திருப்பித் தராமல் ஏமாற்றிவிட்டதாகவும், தற்போது சூர்யா தேவி விவகாரத்தில் தன்னைத் தேவையின்றி வம்புக்கு இழுப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். “என்னையும் சூர்யா தேவியையும் கஞ்சா வியாபாரிகள் என்று நாஞ்சில் விஜயன் அவதூறாகப் பேசியுள்ளார்; கஷ்டப்பட்டு உழைத்துச் சம்பாதிக்கும் எங்களுக்கு எதற்கு இந்த அவப்பெயர்? இதற்காக அவன் கண்டிப்பாக என்னிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும்” என்று வைசு வலியுறுத்தினார்.
சமூகத்தில் ஒரு திருநங்கையாகப் போராடி, சினிமா துறையில் வரும் சின்னச் சின்ன வாய்ப்புகளில் நடித்துத் தான் வாழ்ந்து வருவதாகக் குறிப்பிட்ட வைசு, நாஞ்சில் விஜயன் தனது நடிப்பு வாய்ப்புகளைக் கெடுப்பதாக மிரட்டுவதாகவும் குற்றம் சாட்டினார். “நீ எங்கு வாய்ப்பு தேடிச் சென்றாலும் உன்னை வாசலிலேயே துரத்த வைப்பேன் என்றும், ஆட்களை அனுப்பி என் வீட்டிற்கே வந்து மிரட்டல் விடுப்பதாகவும்” அவர் வேதனை தெரிவித்தார். நாஞ்சில் விஜயன் தன்னை ஆபாசமாகப் பேசியதற்கான ஆடியோ ஆதாரங்கள் தன்னிடம் இருப்பதாகவும், இந்த முறை அவனைச் சும்மா விடப்போவதில்லை என்றும், சட்டப்படி அவன் மன்னிப்பு கேட்பதுடன் தன் 3 லட்சம் ரூபாயையும் திருப்பித் தர வேண்டும் என்றும் வி.ஜே.வைசு உறுதியாகத் தெரிவித்துள்ளார்.
