இருப்பது ஒரு லைஃப்.. எனக்கு 3 வைஃப்…ஒரே காரில் வந்த 2 முன்னாள் மனைவிகள் மற்றும் புது காதலி… பாலிவுட்டையே அதிரவைத்த அமீர்கான்…ஈகோவே இல்லாமல் சுற்றும் அமீர்கானின் மனைவிகள்…! – cinefeeds
Connect with us

CINEMA

இருப்பது ஒரு லைஃப்.. எனக்கு 3 வைஃப்…ஒரே காரில் வந்த 2 முன்னாள் மனைவிகள் மற்றும் புது காதலி… பாலிவுட்டையே அதிரவைத்த அமீர்கான்…ஈகோவே இல்லாமல் சுற்றும் அமீர்கானின் மனைவிகள்…!

Published

on

பாலிவுட் திரையுலகின் ‘மிஸ்டர் பெர்பெக்ட்’ என்று அழைக்கப்படும் நடிகர் அமீர்கான், விரைவில் தனது 3வது திருமணத்திற்குத் தயாராகி வருவதாகத் தகவல்கள் வெளியாகி வருகின்றன. பாலிவுட்டில் பல பிரபலங்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட திருமணங்களைச் செய்துகொண்டாலும், விவாகரத்துக்குப் பின் முன்னாள் மனைவிகள் ஒரே இடத்தில் சந்திப்பதே அபூர்வமாகப் பார்க்கப்படும். ஆனால், அமீர்கானின் வாழ்க்கையில் நடந்துள்ள ஒரு சுவாரசியமான சம்பவம் ஒட்டுமொத்த பாலிவுட்டையும் தாண்டி ஹாலிவுட் வரை ஆச்சரிய அலைகளை ஏற்படுத்தியுள்ளது. எந்தவொரு ஈகோவும் இல்லாமல் அமீர்கானின் முதல் மனைவி, இரண்டாவது மனைவி மற்றும் அவரது புதிய காதலி ஆகிய மூவரும் ஒரே காரில் வந்து, ஒரே நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள விசித்திர நிகழ்வுதான் இப்போது இணையத்தில் செம வைரல்.

அமீர்கானின் திருமண வாழ்க்கை எப்போதும் ஒரு குறிப்பிட்ட இடைவெளியைக் கொண்டது போல நகர்ந்து வருகிறது. அவர் முதலில் ரீனா தத்தாவைத் திருமணம் செய்து 13 ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்த பின் விவாகரத்து பெற்றார். அதன் பின்னர், ‘லகான்’ திரைப்படத்தின் போது உதவி இயக்குநராகப் பணியாற்றிய கிரண் ராவை காதலித்துத் திருமணம் செய்தார். அவரோடும் சரியாக 13 ஆண்டுகள் குடும்பம் நடத்திவிட்டு, பின்னர் அவரையும் பிரிந்தார். தற்போது 60 வயதாகும் அமீர்கான், தனது மகளுக்கே திருமணம் முடித்துவிட்ட நிலையிலும், கௌரி ஸ்பிராட் என்ற பெண்ணை வரும் ஜூலை மாதம் 3வது முறையாகத் திருமணம் செய்துகொள்ளப் போவதாகப் பாலிவுட் வட்டாரங்கள் அதிகாரப்பூர்வமற்ற தகவல்களைப் பகிர்ந்து வருகின்றன.

Advertisement

கூடப்பிறந்த அண்ணன், தம்பிகளே ஒரு சுப நிகழ்ச்சியில் கலந்துகொள்ள ஈகோ பார்க்கும் இந்தத் தற்காலச் சூழலில், அமீர்கான் தனது முன்னாள் மனைவிகளான ரீனா தத்தா, கிரண் ராவ் மற்றும் புதிய காதலி கௌரி ஸ்பிராட் ஆகிய மூவரையும் எப்படி ஒரே காரில் அழைத்து வந்தார் என்பதுதான் அனைவரின் மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது. “இருப்பது ஒரு லைஃப்.. எனக்கு 3 வைஃப்” என்ற பாணியில், அந்த மூன்று பெண்களும் வாழ்க்கையை மிக முதிர்ச்சியோடு புரிந்துகொண்டார்களா, அல்லது பெண்களைச் சமாளிக்கும் வித்தையை அமீர்கான் அத்தப்படியாகத் தெரிந்து வைத்துள்ளாரா என்பது பாலிவுட்டுக்கே இன்னும் புரியாத புதிராகவே நீடிக்கிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in