16 வயதிலேயே வந்த அந்த கொடுமை…வெறுப்பாளர்கள் எப்போதுமே மாற மாட்டார்கள்…முன்னாடி குண்டுன்னாங்க, இப்போ…சர்ஜரி வதந்திகளுக்கு குஷ்பு மகள் கொடுத்த நறுக்குத்தெறித்த பதில்…! – cinefeeds
Connect with us

CINEMA

16 வயதிலேயே வந்த அந்த கொடுமை…வெறுப்பாளர்கள் எப்போதுமே மாற மாட்டார்கள்…முன்னாடி குண்டுன்னாங்க, இப்போ…சர்ஜரி வதந்திகளுக்கு குஷ்பு மகள் கொடுத்த நறுக்குத்தெறித்த பதில்…!

Published

on

நடிகையும் அரசியல்வாதியுமான குஷ்புவின் இளைய மகள் அனந்திதா சுந்தர், முன்பு “அதிக உடல் எடையுடன் இருக்கிறார்” என்று சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டார். ஆனால், சமீபத்தில் வெளியான ‘டபுள் ஆக்குபன்சி’ படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்ற அவரைப் பார்த்த நெட்டிசன்கள், “இவ்வளவு ஒல்லியாக எப்படி மாறினார்?” என்று புதிய சர்ச்சையைக் கிளப்பியுள்ளனர். குஷ்புவின் குடும்பமே ‘ஓசெம்பிக்’ (Ozempic) போன்ற உடல் எடையைக் குறைக்கும் மருந்துகளைப் பயன்படுத்தியிருப்பதாகவும், அறுவை சிகிச்சை செய்துகொண்டதாகவும் பரவிய வதந்திகளுக்கு அனந்திதா தற்போது மனம் திறந்து பதிலளித்துள்ளார்.

 இந்த விமர்சனங்கள் குறித்துப் பேசிய அனந்திதா, “நானும் என் அக்காவும் அதிக எடையால் 16 வயதிலேயே உடல்நலப் பிரச்சினைகளைச் சந்தித்ததால் ஆரோக்கியத்திற்காக எடையைக் குறைக்க முடிவு செய்தோம். 2018 அல்லது 2019 இல் தொடங்கிய இந்தத் தொடர் முயற்சி, கடந்த 7 ஆண்டுகால உழைப்பிற்குப் பின் கிடைத்த பலனே தவிர, ஒரே இரவில் நடந்த மாற்றம் அல்ல” என்று தெளிவுபடுத்தியுள்ளார். மேலும், கொரோனா காலத்தின் மூன்று ஆண்டுகளில் தங்களுக்குள் ஏற்பட்ட உடல் மாற்றங்களை மக்கள் நேரில் பார்க்காததே, அவர்கள் சர்ஜரி அல்லது மருந்துகளின் மூலம் தான் எடை குறைந்ததாகத் தவறாகப் பேசுவதற்குக் காரணம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

 எடையைக் குறைத்த பிறகு தன்னை ‘திருநங்கை’ போல இருப்பதாகக் கேலி செய்தவர்கள் குறித்து வருத்தம் தெரிவித்த அனந்திதா, வெறுப்பாளர்கள் எப்போதும் மாற மாட்டார்கள் என்பதைப் புரிந்து கொண்டதாகவும், தற்போது வரும் எதிர்மறையான கமெண்ட்டுகளைப் பற்றித் தான் கவலைப்படுவதில்லை என்றும் கூறியுள்ளார். 19 வயதிலேயே உதவி இயக்குநராகப் பணியாற்றத் தொடங்கி, தற்போது தயாரிப்புத் துறையில் கவனம் செலுத்தி வரும் அவர், அக்கா அவந்திகாவின் திருமணப் பத்திரிகை கொடுக்க முதலமைச்சர் விஜய்யைச் சந்தித்த சுவாரசியமான அனுபவத்தையும் பகிர்ந்துள்ளார். விஜய் சாரை முதல்முறையாகப் பார்த்த சந்தோஷத்தில் தான் மயங்கி விழப் போனதாகவும், அப்போது அவர் தன்னைத் தாங்கிப் பிடித்த நெகிழ்ச்சியான தருணத்தையும் அனந்திதா அந்தப் பேட்டியில் நினைவுகூர்ந்துள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in