LATEST NEWS
சனியின் நட்சத்திர பெயர்ச்சி…! இந்த ராசிக்கார்களுக்கு பணமழை பொழியும் நேரம்…. யாருக்கெல்லாம் ஜாக்பாட் தெரியுமா…?
ஜோதிட சாஸ்திரத்தின்படி, நவகிரகங்களில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த கிரகமாக விளங்கும் சனி பகவான், வரும் ஜூலை மாதம் 2-ஆம் தேதி ரேவதி நட்சத்திரத்தின் இரண்டாம் பாதத்திற்குத் தனது இடத்தை மாற்றுகிறார். ஆகஸ்ட் 8-ஆம் தேதி வரை அவர் இதே நட்சத்திரத்தில் நிலைத்திருக்க உள்ளதால், இந்தச் சஞ்சாரம் குறிப்பிட்ட சில ராசியினருக்குப் பெரும் திருப்புமுனையையும் அதிர்ஷ்டத்தையும் அள்ளித்தரப் போகிறது.
பொதுவாகச் சனியின் இடமாற்றம் பல்வேறு சவால்களைத் தரும் எனக் கருதப்பட்டாலும், இந்த நட்சத்திரப் பெயர்ச்சியானது மிதுனம், கடகம், கன்னி மற்றும் கும்பம் ஆகிய நான்கு ராசிக்காரர்களின் வாழ்வில் பொருளாதார உயர்வையும், பெரும் வெற்றியையும் தேடித்தரப் போகும் பொற்காலமாக அமையவுள்ளது.
இதில் மிதுன ராசியினருக்குத் தடைப்பட்ட சுபகாரியங்கள் கைகூடுவதுடன், உத்தியோகத்தில் பதவி உயர்வும், புதிய வரன்களும் அமையக்கூடும். கடக ராசியினருக்குப் பல்லாண்டுகளாக நீடித்து வந்த பண நெருக்கடிகள் நீங்கி, பல்வேறு வழிகளில் இருந்து தனவரவு பெருகும்.
அதேபோல் கன்னி ராசியினருக்குக் கஷ்டமான காலங்கள் முடிவுக்கு வந்து, கூட்டுத் தொழிலில் இருந்த சிக்கல்கள் தீர்ந்து சொத்து சேர்க்கை உண்டாகும். இறுதியாகக் கும்ப ராசியினருக்குத் தேவையற்ற செலவுகள் குறைந்து, பூர்வீக சொத்துக்கள் வாங்கும் யோகமும், பங்குச் சந்தை முதலீடுகள் மூலம் எதிர்பாராத அதிரடி லாபங்களும் கிட்டும் என்பதால் இந்த நான்கு ராசிகளும் ஜூலை முதல் ராஜயோகத்தை அனுபவிக்கப் போகிறார்கள்.
