மது பிரியர்களுக்கு ஹேப்பி நியூஸ்…! தமிழக டாஸ்மாக்கில் களமிறங்கும் 54 புதிய பிராண்டுகள்..!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

மது பிரியர்களுக்கு ஹேப்பி நியூஸ்…! தமிழக டாஸ்மாக்கில் களமிறங்கும் 54 புதிய பிராண்டுகள்..!!!

Published

on

தமிழக டாஸ்மாக் கடைகளில் தற்சமயம் நூற்றுக்கும் மேற்பட்ட நிறுவனங்களின் விஸ்கி, பிராந்தி, பீர், ஒட்கா போன்ற மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இவற்றில் குறிப்பிட்ட சில நிறுவனங்களின் தயாரிப்புகளுக்கே மதுப்பிரியர்களிடம் நல்ல வரவேற்பு உள்ளது. அதே நேரத்தில், புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா மற்றும் கேரளா போன்ற அண்டை மாநிலங்களில் கிடைக்கக்கூடிய சில பிரபல பிராண்டுகள் தமிழகத்தில் கிடைப்பதில்லை என்ற குறைபாடு மதுப்பிரியர்களிடம் நீண்ட நாட்களாக இருந்து வருகிறது.

இக்குறையைத் போக்கி வாடிக்கையாளர்களின் விருப்பங்களை நிறைவேற்றும் வகையில், மேலும் 54 புதிய நிறுவனங்களின் மதுபான வகைகளைப் பல்வேறு கட்டங்களாக அறிமுகப்படுத்த டாஸ்மாக் நிர்வாகம் தற்போது திட்டமிட்டுள்ளது. இதில் பிராந்தி, விஸ்கி, பீர் போன்ற பல்வேறு வகைகள் அடங்கும். இந்த புதிய பிராண்டுகள் விரைவில் டாஸ்மாக் கடைகளுக்கு விற்பனைக்கு வரவுள்ளதால், தங்களுக்குப் பிடித்தவற்றைத் தேர்வு செய்து வாங்கலாம் என்ற எதிர்பார்ப்பில் மதுப்பிரியர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Advertisement

இது குறித்து டாஸ்மாக் உயர் அதிகாரிகள் கூறும்போது, கடந்த சில ஆண்டுகளில் வாடிக்கையாளர்களின் தேர்வு மற்றும் விருப்பங்கள் பெருமளவு மாறியுள்ளதாகத் தெரிவித்தனர். அவர்கள் தற்சமயம் பிரீமியம் மற்றும் அதிக வரவேற்பு கொண்ட பிராண்டுகளையே அதிகம் விரும்பிக் கேட்கிறார்கள். எனவே, வாடிக்கையாளர்களின் தேவைகளைத் துல்லியமாக ஆராய்ந்து, விரிவான ஆலோசனைகளுக்குப் பிறகே இந்த புதிய 54 பிராண்டுகளை அறிமுகம் செய்ய முடிவு செய்துள்ளதாக அதிகாரிகள் விளக்கியுள்ளனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in