தவெக- தமாகா கூட்டணி?… உண்மையை போட்டு உடைத்த ஜி.கே.வாசன்… தமிழக அரசியலில் திடீர் திருப்பம்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

தவெக- தமாகா கூட்டணி?… உண்மையை போட்டு உடைத்த ஜி.கே.வாசன்… தமிழக அரசியலில் திடீர் திருப்பம்..!!

Published

on

தமாகா தலைவர் ஜி.கே.வாசன், தமிழகத்தில் புதிதாக உருவெடுத்துள்ள தவெக கட்சியுடன் இணைந்து செயல்படுவது குறித்து பல்வேறு தரப்பிலிருந்தும் கருத்துகள் வந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். தவெக உடனான கூட்டணி குறித்த இறுதி முடிவை, வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்பாக முறைப்படி அறிவிப்போம் என்று அவர் கூறியுள்ளார். மேலும், புதிதாகப் பொறுப்பேற்றுள்ள அரசுக்கு மக்கள் நலத்திட்டங்களைச் செயல்படுத்த போதிய கால அவகாசம் தேவை என்றும் அவர் தனது கருத்தைப் பதிவு செய்துள்ளார்.

தவெக முன்னெடுத்துள்ள ஊழல் ஒழிப்பு நடவடிக்கைகளை மனதார வரவேற்பதாகக் குறிப்பிட்டுள்ள ஜி.கே.வாசன், தமிழகத்தின் மிக முக்கியப் பிரச்சினையான மது ஒழிப்பிற்கும் முக்கியத்துவம் அளித்துள்ளார். தமிழகத்தில் படிப்படியாக முழுமையான மதுவிலக்கை அமல்படுத்தி, விரைவில் மது இல்லாத ஒரு முன்மாதிரி மாநிலமாக தமிழகத்தை தவெக அரசு உருவாக்க வேண்டும் என்றும் அவர் தனது எதிர்பார்ப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in