“ரயிலில் அத்துமீறிய வாலிபர்…! மேக்கப் போட்டு.. வளையல் மாட்டி இளம்பெண் கொடுத்த அதிரடி தண்டனை..! வைரல் வீடியோ..!!” – cinefeeds
Connect with us

LATEST NEWS

“ரயிலில் அத்துமீறிய வாலிபர்…! மேக்கப் போட்டு.. வளையல் மாட்டி இளம்பெண் கொடுத்த அதிரடி தண்டனை..! வைரல் வீடியோ..!!”

Published

on

மராட்டிய மாநிலம் பத்னேரா மற்றும் அகோலா இடையே சென்று கொண்டிருந்த எக்ஸ்பிரஸ் ரயில் ஒன்றில், இளைஞர் ஒருவர் பெண் பயணி ஒருவரிடம் பாலியல் ரீதியாக அத்துமீறி தவறாக நடந்து கொண்டதாகக் கூறப்படுகிறது. இதனால் கோபமடைந்த அங்கிருந்த சக பயணிகள் உடனடியாக அந்த இளைஞரைப் பிடித்து தர்ம அடி கொடுத்துள்ளனர்.

அதன்பின்னர், பெண்களுக்கு எதிராக அத்துமீறிய அந்த இளைஞருக்கு ஒரு நல்ல பாடம் கற்பிக்க நினைத்த அங்கிருந்த இளம்பெண் ஒருவர், மிகவும் நூதனமான தண்டனை ஒன்றை வழங்கியுள்ளார். தன்னிடம் இருந்த மேக்கப் பொருட்களை எடுத்து அந்த இளைஞரின் முகத்தில் லிப்ஸ்டிக் பூசியதோடு, அவருடைய கைகளில் வளையல்களையும் மாட்டிவிட்டு அவமானப்படுத்தியுள்ளார். இந்த வினோதமான தண்டனை குறித்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி மிக வேகமாக வைரலாகி வருகின்றன.

Advertisement

இந்த வீடியோவைப் பார்த்த இணையவாசிகள் பலரும் அந்த இளம்பெண்ணின் துணிச்சலான செயலை வெகுவாகப் பாராட்டி வருகின்றனர். பெண்களிடம் அத்துமீறும் நபர்களை இதுபோன்று பொதுவெளியில் அவமானப்படுத்த வேண்டும் என்று ஒரு தரப்பினர் ஆதரவு தெரிவிக்கும் அதே வேளையில், பொதுமக்கள் சட்டத்தை கைகளில் எடுப்பது தவறு என்றும், இதுபோன்ற செயல்களுக்குப் பதிலாக காவல்துறையிடம் ஒப்படைத்து சட்டப்படி உரிய தண்டனை பெற்றுத் தருவதே சரியானது என்றும் மற்றொரு தரப்பினர் தங்களது கருத்துக்களைப் பகிர்ந்து வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in