LATEST NEWS
“உங்க தாத்தா செஞ்சது தெரியுமா..?” CTR நிர்மல் குமார் விட்ட ஓபன் சேலஞ்ச்..! நழுவி ஓடிய உதயநிதி..! வச்சு செய்யும் நெட்டிசன்கள்..!!
மேகதாது அணை விவகாரம் தொடர்பாகத் தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த அமைச்சர் CTR நிர்மல் குமார், திமுகவின் செயல்பாடுகளையும் வரலாற்று முடிவுகளையும் சுட்டிக்காட்டி எழுப்பியுள்ள கடுமையான கேள்விகள் தற்போது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செய்தியாளர்களிடம் பேசிய அவர், “துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினிடம் சென்று மேகதாதவில் உண்மையில் என்ன பிரச்சனை என்றும், அவருடைய தாத்தா முன்னாள் முதல்வர் கருணாநிதி 1970 மற்றும் 1971-ஆம் ஆண்டுகளில் என்ன செய்தார் என்றும் கேட்டுப் பாருங்கள். 1998-ல் அவரது தலைமையில் கமிட்டி அமைக்கப்பட்டபோது, அதில் இருந்த நிபந்தனைகளை நீக்கியது குறித்தும், அரசிதழில் (Gazette) அறிக்கை வெளியிடுவது குறித்து அன்றைய அரசு எதுவும் செய்யாதது குறித்தும் கேட்டுப் பாருங்கள்” என்று அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
தொடர்ந்து பேசிய CTR நிர்மல் குமார், “உதயநிதி ஸ்டாலினிடம் நான் சொல்வதைக் கேட்டுப் பாருங்கள்; உங்களது கட்சியை வழிநடத்துவதற்கான தகுதி உங்களுக்கு இருக்கிறதா? இன்று இது தொடர்பாக மக்களிடம் வாக்கெடுப்பு நடத்துவதற்கு உங்களுக்குத் தைரியம் இருக்கிறதா?” என அதிரடியாகச் சவால் விடுத்தார். CTR நிர்மல் குமாரின் இந்தக் கேள்விகளைத் தொடர்ந்து, செய்தியாளர்களும் உதயநிதி ஸ்டாலினிடம் மேகதாது அணை விவகாரம் குறித்து நேரடிக் கேள்விகளை எழுப்பினர். ஆனால், இந்தக் கேள்விகளுக்கு எவ்விதப் பதிலும் அளிக்காமல் உதயநிதி ஸ்டாலின் அங்கிருந்து நழுவிச் சென்றுவிட்டார்.
CTR நிர்மல் குமார் காட்டமாகக் கேள்வி எழுப்பியதையும், அதற்குப் பதில் கூற முடியாமல் உதயநிதி ஸ்டாலின் அங்கிருந்து நழுவிச் சென்றதையும் ஒன்றாக இணைத்து உருவாக்கப்பட்ட வீடியோக்கள், தற்போது சமூக வலைதளங்களில் நெட்டிசன்களால் மிகத் தீவிரமாகப் பகிரப்பட்டு வைரலாகி வருகின்றன. இந்தச் சம்பவம் தமிழக அரசியலில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.
