CRIME
“6 வருடமாய் காணவில்லை..” திடீரென தெருவில் கிடந்த 35 வயது பெண்ணின் சடலம்.. சொந்த மக்களுக்கு தாயும் கணவனும் செய்த கொடூரம்… உறவினர்கள் உடைத்த அதிர்ச்சி உண்மை..!!!
உயிர்கொல்லி நோயால் பாதிக்கப்பட்டிருந்த 35 வயது இளம்பெண் ஒருவர், அவர் தங்கியிருந்த அறையிலிருந்து மெத்தையுடன் தெருவில் தூக்கி வீசப்பட்ட அதிர்ச்சி சம்பவம் அண்மையில் வெளிச்சத்திற்கு வந்தது. தற்போது அந்தப் பெண்ணின் உறவினர்கள் இந்த மர்ம மரணம் குறித்துத் தங்கள் மௌனத்தைக் கலைத்துள்ளனர். அந்தப் பெண்ணின் பெயர் சுவீடேனியா பாடிஸ்டா காஸ்டிலோ என்றும், மெத்தையோடு தெருவில் வீசப்பட்ட அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த சில நாட்களிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்துவிட்டார் என்றும் தெரியவந்துள்ளது.
சுவீடேனியாவின் உறவினரான சாண்டா காஸ்டிலோ யெஸ்காஸ் சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ள தகவல் மேலும் நெஞ்சை உலுக்கியுள்ளது. கடந்த 6 ஆண்டுகளாக சுவீடேனியா எங்கு இருக்கிறார் என்றே தெரியாமல் இருந்த நிலையில், அவர் மெத்தையோடு தெருவில் வெளியேற்றப்பட்ட வைரல் வீடியோவை பார்த்தே அவர் சான் ஜுவான் பாடிஸ்டா டுக்ஸ்டெபெக் பகுதியில் இருப்பதை அறிந்துள்ளனர். சுவீடேனியா தனது கணவர் மற்றும் சொந்தத் தாயின் கடுமையான குடும்ப வன்முறையில் சிக்கியிருந்ததாகவும், அவருக்கும் அவரது பாட்டிக்கும் உதவ நினைத்தபோதும் சுவீடேனியாவின் தாய் அதற்கு அனுமதிக்கவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். இத்தகைய இக்கட்டான சூழ்நிலையில் இருக்கும் பெண்கள் உடனடியாக உதவி தேட வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
