CRIME
அய்யோ கடவுளே.. காட்டுக்குள் 12 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்.. 4 நாட்கள் கண்ணாமூச்சி காட்டிய குற்றவாளிக்கு நேர்ந்த கொடூர கதி.. போலீசின் அதிரடி வேட்டை..!!
மேற்கு வங்க மாநிலம் உத்தர தினாஜ்பூர் மாவட்டத்தின் ராய்கஞ்ச் பகுதியில், கடந்த நவம்பர் 3-ஆம் தேதி 12 வயது சிறுமி ஒருவர் திடீரென மாயமானார். இதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட தேடுதலில், இரண்டு நாட்களுக்குப் பிறகு குலிக் காட்டுப் பகுதியில் அந்தச் சிறுமி சடலமாக மீட்கப்பட்டார். சிறுமி கடத்தப்பட்டு, கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுத் திட்டமிட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக அவரது குடும்பத்தினர் காவல்துறையினரிடம் பரபரப்புக் குற்றச்சாட்டை முன்வைத்தனர்.
இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், நான்கு நாட்கள் தீவிரத் தேடுதலுக்குப் பிறகு இக்கொடூர குற்றத்தில் தொடர்புடைய முக்கியக் குற்றவாளியான திலீப் ராய் என்பவரைக் கண்டுபிடித்தனர். அவர் தப்பியோடி பீகார் எல்லை நோக்கிச் செல்ல முயன்றபோது, காவல்துறையினர் அவரைச் சூழ்ந்து பிடித்தனர். அப்போது அதிகாலை 3 மணிக்குப் பிறகு நடந்த இந்த அதிரடி ஆபரேஷனின் போது, திலீப் ராய் போலீசாரை நோக்கித் துப்பாக்கியால் சுட்டுத் தப்பிக்க முயன்றதாகக் கூறப்படுகிறது. இதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாகப் போலீசார் நடத்திய தற்காப்புத் துப்பாக்கிச் சூட்டில் திலீப் ராய் சம்பவ இடத்திலேயே சுட்டுக் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
