CRIME
ஐயோ கொடுமையே.. 12 வயது சிறுமியைக் கடத்திய 7 மிருகங்கள்.. கடத்தல்காரர்களை ஓட ஓட விரட்டியடித்த காட்டு ராஜாக்கள்.. நெஞ்சை உலுக்கும் பின்னணி..!!
கடந்த 2005-ஆம் ஆண்டு ஜூன் மாதம், எத்தியோப்பியாவின் தென்மேற்குப் பகுதியில் பள்ளி முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த 12 வயது சிறுமி ஒருவரை 7 பேர் கொண்ட கும்பல் கட்டாயத் திருமணம் செய்வதற்காகக் கடத்திச் சென்றது. அந்தப் பிஞ்சுக் குழந்தையை ஒரு வாரம் முழுவதும் அவர்கள் அடைத்து வைத்துக் கொடூரமாக அடித்துத் துன்புறுத்தியுள்ளனர். ஆனால், யாரும் எதிர்பாராத ஒரு திருப்பமாக, திடீரென அங்கு வந்த 3 சிங்கங்கள் அந்த கடத்தல்காரர்களை நோக்கி ஆக்ரோஷமாகப் பாய்ந்து, அவர்களை அச்சுறுத்தி அங்கிருந்து ஓட ஓட விரட்டியடித்தன. மிருகங்கள் என்று கருதப்படும் அந்த சிங்கங்கள், மனிதர்களை விட மனிதாபிமானத்தோடு அச்சிறுமியைக் காக்கத் தொடங்கின.
சுமார் அரை நாள் முழுவதும் அந்த 3 சிங்கங்களும் அச்சிறுமியை எவ்விதத் தீங்கும் செய்யாமல், தங்களது சொந்தக் குட்டி போலக் கண்ணும் கருத்துமாகப் பாதுகாத்துக் காவல் காத்து நின்றன. தகவல் அறிந்து எத்தியோப்பிய போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சேரும் வரை அங்கேயே நின்றிருந்த சிங்கங்கள், போலீசார் வந்தவுடன் அச்சிறுமியை அவர்களிடம் பத்திரமாக ஒப்படைத்துவிட்டு அமைதியாக மீண்டும் அடர்ந்த காட்டுக்குள்ளே சென்றன. இந்த விசித்திரமான மற்றும் நெகிழ்ச்சியூட்டும் சம்பவத்திற்குப் பிறகு, சிறுமியைக் கடத்திய 7 பேரில் 4 பேரை போலீசார் அதிரடியாகக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
