LATEST NEWS
“விஜயுடன் பேசுறதில்ல, அவர் படங்களையும் பார்க்குறதில்ல” – 12 ஆண்டுக்கும் முன் ஏற்பட்ட சண்டை – ரகசியத்தை உடைத்த நெப்போலியன்..!
தமிழ் சினிமாவில் தற்போது உச்ச நட்சத்திரமாக விளங்குபவர் தளபதி விஜய், தற்பொழுது தமிழ் சினிமாவில் அசைக்க முடியாத ஒரு இடத்தை பிடித்து வருகிறார். நடிகர் நெப்போலியனுடன் பிரபல ஊடகம் ஒன்று காணொளி மூலம் பேட்டி கண்டது. நடிகர் விஜய்யின் போக்கிரி படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்த போது விஜய்க்கும் எனக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது என்று நெப்போலியன் சமீபத்தில் பேட்டி ஒன்றில் குறிப்பிட்டுள்ளார். படத்தில் நடிக்கும் போது விஜய் கூட ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவருடன் பேசுவதில்லை.
நெப்போலியன் போக்கிரி படத்தில் நடிக்கும் நேரத்தில் அவரது நண்பர்கள் விஜய்யை சந்திக்க முடியுமா என கேட்க, விஜயை பாக்கணும் அவ்ளோ தானே.. வாங்க போலாம்.. பாக்குறது மட்டும் இல்ல, போட்டோவும் எடுத்துக்கலாம் என்று போக்கிரி படப்பிடிப்பு தளத்திற்கு அழைத்து வந்துள்ளார். கேரவேன் கதவருகே அமர்ந்திருந்த விஜய்யின் பாதுகாவலர் நெப்போலியனை தடுத்துள்ளார். இதனால், அவமானப்பட்ட நெப்போலியன் அந்த பாதுகாவலருடன் வாக்கு வாதத்தில் ஈடுபடவே படப்பிடிப்பு தளம் கலவரமாகியுள்ளது.
வெளியில் சத்தம் வருவதை உணர்ந்த நடிகர் விஜய் கேரவேனுக்கு வெளியே வந்து நெப்போலியனிடம்.. சார்… உங்களுக்கு கொஞ்சமம் கூட மேனர்ஸ் இல்லையா..? என்று முகத்தில் அடித்தது போல கோபமாக பேசியுள்ளார். அதுவும், நடிகர் நெப்போலியனின் நண்பர்கள் முன்னிலையிலேயே திட்டியதால் நெப்போலியன் கடும் மன வருத்தத்திற்கு ஆளாகியுள்ளார். இது தான் நெப்போலியனுக்கு, விஜய்க்கும் கருத்து வேறுபாடு ஏற்பட காரணமாகி விட்டது என்று கூறுகிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.
