“திமுகன்னா ஊழல்.. ஊழல்னா திமுக..!” அமலாக்கத்துறை ஆதாரங்களை அடுக்கி சட்டசபையில் விளாசிய முதலமைச்சர் விஜய்…! அலறிய திமுக எம்.எல்.ஏ-க்கள்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“திமுகன்னா ஊழல்.. ஊழல்னா திமுக..!” அமலாக்கத்துறை ஆதாரங்களை அடுக்கி சட்டசபையில் விளாசிய முதலமைச்சர் விஜய்…! அலறிய திமுக எம்.எல்.ஏ-க்கள்..!!

Published

on

சட்டசபையில் காவல்துறை மானிய கோரிக்கை மீதான விவாதங்கள் நிறைவடைந்த நிலையில், எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு முதலமைச்சர் விஜய் பதில் அளித்து பேசினார். அப்போது அவர், திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து இருந்ததாகவும், ஊழல் மற்றும் முறைகேடுகள் நடந்ததாகவும் பகிரங்கமாகக் குற்றம்சாட்டினார். திமுகவினர் எப்போது எதைச் செய்தாலும் குடும்பமாகத்தான் செய்வார்கள் என்றும், செய்யும் தவறையே முறையாக செய்யும் வகையில் விஞ்ஞான ஊழலில் ஈடுபட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். மேலும், கடந்த ஆட்சியில் பார்ட்டி ஃபண்ட் என்ற பெயரில் 7.5% முதல் 10% வரை லஞ்சம் வாங்கியதாக அமலாக்கத் துறை கூறியுள்ளதாகவும், அதில் முக்கிய நபர்கள் ஸ்டாலின் மற்றும் உதயநிதிதான் என அமலாக்கத் துறை தெரிவித்திருப்பதாகவும், இதற்கான ஆதாரங்கள் தன்னிடம் உள்ளதாகவும் முதலமைச்சர் விஜய் பேசினார்.

முதலமைச்சர் விஜய்யின் இந்த பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து, அவர் பேசிக்கொண்டிருந்தபோதே திமுக எம்.எல்.ஏ.க்கள் தங்கள் இருக்கைகளில் இருந்து எழுந்து நின்று முழக்கமிடத் தொடங்கினர். முதலமைச்சர் கூறிய குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளிக்கவும் பேசவும் தங்களுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று சபாநாயகரிடம் வலியுறுத்தினர். ஆனால், அவர்களுக்கு உடனடியாகப் பேச சபாநாயகர் அனுமதி வழங்க மறுத்துவிட்டார். இதனிடையே, அவை முன்னவரான செங்கோட்டையன் திமுகவினரை அவையிலிருந்து வெளியேற்ற வேண்டும் என்று சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்தார்.

Advertisement

இதனால் திமுகவினரின் அமளி மேலும் அதிகரித்தது. திமுக எம்.எல்.ஏ.க்கள் சபாநாயகர் இருக்கையின் முன்னே சென்று கூச்சலிடத் தொடங்கினர்; சில எம்.எல்.ஏ.க்கள் சபாநாயகர் இருக்கை முன் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து முதலமைச்சர் விஜய் எழுந்து திமுகவினர் பேச அனுமதி அளிக்குமாறு சபாநாயகரிடம் கேட்டுக்கொண்டதால், சபாநாயகர் அவர்களுக்குப் பேச அனுமதி அளிப்பதாகத் தெரிவித்தார். இருப்பினும், திமுகவினர் மீண்டும் தொடர்ந்து கூச்சலிட்டதால் அனுமதி தர முடியாது என சபாநாயகர் திட்டவட்டமாகக் கூறவே, திமுக எம்.எல்.ஏ.க்கள் அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர். இதனிடையே, சபாநாயகர் மேஜைக்கு அருகே தரையில் அமர்ந்திருந்த மூத்த திமுக எம்.எல்.ஏ. ஒருவர் எழுந்துகொள்ள முதலமைச்சர் விஜய் அவரது கையைப் பிடித்து உதவி செய்தார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in