FLASH: கார் – ஆம்னி பஸ் மோதியதில் 4 பேர் பலி… காலையிலேயே பெரும் அதிர்ச்சி..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

FLASH: கார் – ஆம்னி பஸ் மோதியதில் 4 பேர் பலி… காலையிலேயே பெரும் அதிர்ச்சி..!!

Published

on

பெரம்பலூர் மாவட்டம் துறைமங்கலம் அருகே அதிகாலையில் நிகழ்ந்த கோர சாலை விபத்தில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் நடைபெற்ற தங்களது சகோதரரின் திருமண விழாவை முடித்துவிட்டு, காரில் சென்னை நோக்கித் திரும்பிக் கொண்டிருந்தபோது இந்த விபத்து நேர்ந்துள்ளது. இவர்கள் பயணம் செய்த கார் கட்டுப்பாட்டை இழந்து, எதிரே வந்த தனியார் ஆம்னி பஸ் மீது எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் பயங்கரமாக மோதியது.

இந்த விபத்தின் கொடூரத்தால் காரில் பயணம் செய்த காளீஸ்வரன், பிரபாகரன், கார்த்தி மற்றும் அவரது மனைவி சூர்யா ஆகிய நான்கு பேரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். மேலும், காரில் இருந்த மற்ற 4 பேர் பலத்த காயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து பெரம்பலூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in