LATEST NEWS
“பணமே வேண்டாம்!” வாடகை வாங்க மறுத்த இந்திய ஆட்டோ ஓட்டுநர்.. திகைத்துப் போய் வெளிநாட்டுப் பெண் செய்த காரியத்தை பாருங்க.. நெஞ்சை நனைக்கும் வைரல் வீடியோ..!!
இந்தியாவுக்குச் சுற்றுலா வந்த வெளிநாட்டுப் பெண் ஒருவர், தன்னிடம் வாடகை வாங்க மறுத்த இந்திய ஆட்டோ ஓட்டுநரின் மனிதநேயத்தால் நெகிழ்ந்து அவருக்கு ரூ.2,000 பரிசு வழங்கிய அன்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. தாரா இங்க்ராம் என்ற அந்த வெளிநாட்டுப் பெண் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள இந்த வீடியோவில், ஆட்டோவில் பயணம் செய்து முடித்த பிறகு அவர் வாடகை கொடுக்க முயன்றுள்ளார். ஆனால், ஆட்டோ ஓட்டுநர் பணத்தைப் பெற்றுக்கொள்ள முற்றிலும் மறுத்து, “பணம் எதுவும் தேவையில்லை” என்று அன்போடு கூறியுள்ளார். ஓட்டுநரின் இந்தத் தாராள மனப்பான்மையால் ஈர்க்கப்பட்ட அந்தப் பெண், அவரது நற்பண்புக்குப் பரிசாக ரூ.2,000 பணத்தை வழங்கியுள்ளார்.
https://www.instagram.com/reel/DdspsbwuEqB/?utm_source=ig_embed&ig_rid=Afo4s34UE9bVm8KzS0pi3xp
பணத்தைப் பெற்றுக்கொண்ட ஓட்டுநர், அந்தப் பெண்ணுக்குத் தனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டார். தொடர்ந்து நடந்த உரையாடலில், அவருக்கு ஒரு மகனும் மூன்று மகள்களும் இருப்பது அந்தப் பெண்ணுக்குத் தெரியவந்தது. இந்த நெகிழ்ச்சியான சம்பவம் நடந்து ஒரு வருடம் கடந்துவிட்ட போதிலும், அந்த ஓட்டுநரின் முகத்தில் தெரிந்த மகிழ்ச்சியையும் அவரது நல்ல உள்ளத்தையும் தாராவால் மறக்க முடியவில்லை. தற்போது அந்த ஓட்டுநரை மீண்டும் சந்திக்க விரும்புவதாகத் தெரிவித்துள்ள அந்தப் பெண், அவரை அடையாளம் காண்பதற்கு உதவுமாறு இணையவாசிகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். மனிதநேயத்தின் அழகிய அடையாளமாகத் திகழும் இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பலரது இதயங்களையும் வென்று வருகிறது.
