LATEST NEWS
மாணவிக்கு பாலியல் வன்கொடுமையா…? 3 செகண்ட் வீடியோவில் சிக்கிய அந்த உண்மை.. நள்ளிரவில் திரண்ட மாணவர்கள்..! ! நடுநடுங்க வைக்கும் வீடியோ..!!
லவ்லி புரொஃபெஷனல் பல்கலைக்கழகத்தில் சனிக்கிழமை இரவு பரவிய வதந்தியைத் தொடர்ந்து பெரும் பரபரப்பும் போராட்டமும் ஏற்பட்டது. மாணவிகள் வாட்ஸ்அப் மற்றும் சமூக வலைதளங்களில் பரவிய சரிபார்க்கப்படாத பாலியல் வன்கொடுமை குறித்த செய்தியைக் கேட்டு அதிர்ச்சியடைந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இரவு நேரத்தில் திரண்ட மாணவர்கள் வளாகப் பொருட்களைச் சேதப்படுத்தியதோடு, ஜலந்தர்-பக்வாரா நெடுஞ்சாலையையும் மறித்து முழக்கங்களை எழுப்பியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இச்சம்பவம் குறித்து கபூர்தலா எஸ்பி கௌரவ் தூரா தெரிவிக்கையில், இது தொடர்பாக இதுவரை எவ்வித அதிகாரப்பூர்வப் புகாரும் வரவில்லை என்று தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும், சில நாட்களுக்கு முன்பு பல்கலைக்கழகத்தின் வேளாண்மைத் துறை அருகே மாணவி ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் நடந்தபோதிலும், அதற்கும் இந்த பாலியல் வன்கொடுமை வதந்திக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை என்றும் காவல்துறை மற்றும் பல்கலைக்கழக நிர்வாகம் உறுதிப்படுத்தியுள்ளது.
சமூக வலைதளங்களில் பரவும் தகவல்கள் முற்றிலும் ஆதாரமற்ற வதந்திகள் எனத் தெரிவித்துள்ள காவல்துறை, நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவந்து நெடுஞ்சாலைப் போக்குவரத்தைச் சீர்செய்துள்ளது. மாணவர்களிடம் பல்கலைக்கழக நிர்வாகமும் அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்தி வரும் வேளையில், வதந்திகளைப் பரப்ப வேண்டாம் என்று காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.
