LATEST NEWS
விசிகவில் வெடித்தது உள்கட்சிப் பூசல்.. ஒரே நாளில் அடுத்தடுத்து நடந்த புறக்கணிப்புகள்… விழுப்புரம் சம்பவத்தால் தொல். திருமாவளவன் கடும் அதிர்ச்சி..!!
விழுப்புரம் மாவட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் உள்கட்சி பூசல் தற்போது உச்சத்தை எட்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. அங்கு நடைபெற்ற ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ வழங்கும் விழாவை கட்சியின் துணைப் பொதுச்செயலாளரும் அமைச்சருமான வன்னி அரசு தொடங்கி வைத்துள்ளார். ஆனால், அதே மாவட்டத்தைச் சேர்ந்த விசிக நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமாருக்கு இந்த நிகழ்ச்சி குறித்து எந்தவித தகவலும் தெரிவிக்கப்படாமலும், அவர் அழைக்கப்படாமலும் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வலம் வருகின்றன.
அதே நாளில், எம்பி ரவிக்குமார் தலைமையில் நடைபெற்ற மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தை, வன்னி அரசுவும் பங்கேற்காமல் முற்றிலும் புறக்கணித்துள்ளார். இவ்வாறு முக்கிய தலைவர்களிடையே பரஸ்பரம் நிலவும் இந்த உள்கட்சிப் பூசலால், கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் மிகுந்த வருத்தத்தில் இருப்பதாகவும், இந்த விவகாரம் விசிக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
