“நள்ளிரவில் பயங்கரம்..” ஜட்டி, முகமூடி அணிந்து 4 வீடுகளில் கதவை உடைத்து கும்பலின் பகீர் வேட்டை.. நடுக்கத்தில் பொதுமக்கள்.. கேமராவில் சிக்கிய திகில் காட்சி..!! – cinefeeds
Connect with us

CRIME

“நள்ளிரவில் பயங்கரம்..” ஜட்டி, முகமூடி அணிந்து 4 வீடுகளில் கதவை உடைத்து கும்பலின் பகீர் வேட்டை.. நடுக்கத்தில் பொதுமக்கள்.. கேமராவில் சிக்கிய திகில் காட்சி..!!

Published

on

ஆந்திரப்பிரதேசம் ஸ்ரீ சத்ய சாய் மாவட்டத்தின் தர்மவரம் பகுதியில், ‘செட்டி கேங்’ என்று அழைக்கப்படும் பயங்கரமான கொள்ளைக் கும்பல் ஒரே இரவில் அடுத்தடுத்து நான்கு வீடுகளில் துணிகரக் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுள்ளது. வீடுகளின் ஜன்னல்கள் மற்றும் கதவுகளின் கண்ணாடிகளை உடைக்கும் சத்தம் கேட்டு வீட்டு உரிமையாளர்கள் அலர்ட் ஆனதால், கொள்ளையர்கள் தங்களது முயற்சியைக் கைவிட்டு அங்கிருந்து தப்பியோடினர். ஜட்டிகள் மற்றும் முகமூடி அணிந்து வலம் வரும் இந்த ஏழு பேர் கொண்ட கொள்ளைக் கும்பலின் நடமாட்டம், அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களில் அப்படியே பதிவாகியுள்ளது.

இந்தச் சம்பவம் குறித்துத் தகவலறிந்த தர்மவரம் டவுன் சிஐ ரெட்டப்பா உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீவிர விசாரணை மேற்கொண்டார். மேலும், தடயவியல் நிபுணர்கள் குழுவினர் சம்பவ இடத்திலிருந்து முக்கியத் தடயங்களைச் சேகரித்துள்ளனர். பயங்கரமான செட்டி கேங் கொள்ளையர்கள் தர்மவரம் நகருக்குள் புகுந்துள்ள செய்தி காட்டுத்தீ போல பரவியதை அடுத்து, அப்பகுதி பொதுமக்கள் கடுமையான அச்சத்திலும் நடுக்கத்திலும் ஆழ்ந்துள்ளனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in