“ஆட்சிக்கு வரும் முன்பே 4 எம்.எல்.ஏக்களை காட்டி டீல் பேசினாங்க..” பாமக-தவெக ரகசியத்தை உடைத்த விசிக MP ரவிக்குமார்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“ஆட்சிக்கு வரும் முன்பே 4 எம்.எல்.ஏக்களை காட்டி டீல் பேசினாங்க..” பாமக-தவெக ரகசியத்தை உடைத்த விசிக MP ரவிக்குமார்..!!

Published

on

தமிழக வெற்றிக் கழகத்தின் கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சி ஒருபோதும் இணையாது என்று விழுப்புரம் தொகுதி விசிக நாடாளுமன்ற உறுப்பினர் துரை. ரவிக்குமார் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். விழுப்புரத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தவெகவுடன் பாமக ஒரு காலத்திலும் கூட்டணி அமைக்கப் போவதில்லை என்று குறிப்பிட்டதோடு, இவ்விரு கட்சிகளுக்கு இடையேயான கூட்டணி வாய்ப்புகளை முழுமையாக மறுத்துள்ளார்.

தவெக ஆட்சிக்கு வருவதற்கு முன்பாகவே, “நாங்கள் 4 சட்டமன்ற உறுப்பினர்களை கைவசம் வைத்திருக்கிறோம்” என்று கூறி பாமக தவெக-வை அணுகியதாகவும், ஆனால் தவெக தரப்பு அதனை ஏற்கவில்லை என்றும் ரவிக்குமார் அம்பலப்படுத்தியுள்ளார். பாமகவின் அந்த அப்ரோச்சை நிராகரித்த பின்னரே, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளின் ஆதரவை தவெக பெற்றதாக அவர் விளக்கமளித்துள்ளார்.

Advertisement

மேலும், தவெக தலைவர் விஜய் எதிர்காலத்திலும் கூட பாமகவை ஒருபோதும் தனது கூட்டணியில் ஏற்றுக்கொள்ள மாட்டார் என்று ரவிக்குமார் மும்மொழிந்துள்ளார். தவெக – பாமக கூட்டணி குறித்த பல்வேறு அரசியல் யூகங்கள் நிலவி வரும் வேளையில், அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் விசிக எம்பியின் இந்த அதிரடிப் பேட்டி தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in