“எங்கள் எச்சரிக்கையை மீறினார்கள்..” கண்ணிவெடியில் சிக்கி நொருங்கி விழுந்த 2 எண்ணெய் கப்பல்கள்.. ஹார்மூஸ் ஜலசந்தியில் நடந்த பயங்கரம்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“எங்கள் எச்சரிக்கையை மீறினார்கள்..” கண்ணிவெடியில் சிக்கி நொருங்கி விழுந்த 2 எண்ணெய் கப்பல்கள்.. ஹார்மூஸ் ஜலசந்தியில் நடந்த பயங்கரம்..!!

Published

on

ஹார்மூஸ் ஜலசந்தியில் அனுமதி பெறாமல் சென்ற 2 எண்ணெய் கப்பல்கள் கடல் கண்ணிவெடியில் சிக்கி வெடித்து, தீப்பிடித்து எரிந்ததாக ஈரான் கடற்படை தெரிவித்துள்ளது. எங்களது ரேடார் மற்றும் வழிகாட்டும் சாதனங்களின் அனுமதியை மீறி, யாருக்கும் தெரியாமல் ரகசிய பயணம் மேற்கொள்ள முயன்ற போதே இந்த விபத்து நேரிட்டதாகக் கூறப்பட்டுள்ளது.

ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்ரவரி 28-ந்தேதி நடத்திய வான்வழித் தாக்குதலில், அந்நாட்டின் உச்சபட்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி மற்றும் அவரது குடும்பத்தினர் உள்பட ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். இதற்கு ஈரான் தரப்பில் கடுமையான பதிலடி கொடுக்கப்பட்ட நிலையில், பல மாதங்களாக நீடித்து வந்த இந்த மோதலில் இருதரப்பிலும் பெரும் பாதிப்புகள் ஏற்பட்டன.

Advertisement

தற்போது ஈரானுக்கு எதிரான தாக்குதல்களை அமெரிக்கா நிறுத்தியுள்ளதால் மத்திய கிழக்கு பகுதியில் பதற்றம் சற்று தணிந்துள்ளது. இருப்பினும், ஹார்மூஸ் ஜலசந்திப் பகுதியை யார் நிர்வகிப்பது என்பதில் அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே தொடர் போட்டி நிலவி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in