அடக்கடவுளே.. அடுத்தடுத்து வெடித்துச் சிதறிய சிலிண்டர்கள்.. 6 உணவகங்கள் தீக்கிரையான பயங்கர நொடிகள்.. அலறியடித்து ஒடிய மக்கள்.. ஒருவர் பலி நடுங்கவைக்கும் சம்பவம்..!! – cinefeeds
Connect with us

CRIME

அடக்கடவுளே.. அடுத்தடுத்து வெடித்துச் சிதறிய சிலிண்டர்கள்.. 6 உணவகங்கள் தீக்கிரையான பயங்கர நொடிகள்.. அலறியடித்து ஒடிய மக்கள்.. ஒருவர் பலி நடுங்கவைக்கும் சம்பவம்..!!

Published

on

உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவில் உள்ள செக்டார் 125 பகுதியில் உள்ள ஐந்து முதல் ஆறு தற்காலிக உணவகங்களில் இன்று மதியம் திடீரெனப் பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தேநீர் மற்றும் சிற்றுண்டிகள் விற்பனை செய்யும் இந்த உணவகங்களில் ஒன்றில் பற்றிய தீ, அடுத்தடுத்து இருந்த மற்ற கடைகளுக்கும் மளமளவெனப் பரவியது. சம்பவத்தின்போது கடைகளுக்குள் இருந்த சமையல் எரிவாயு சிலிண்டர்கள் பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியதால் தீயின் வீரியம் அதிகரித்து, அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு ஆறுக்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்களுடன் விரைந்து வந்த தீயணைப்புத் துறையினரும், செக்டார் 126 காவல் நிலைய போலீசாரும் இணைந்து பொதுமக்களை அப்புறப்படுத்தித் தீயைக் கட்டுக்குள் கொண்டு வரும் மீட்புப் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். இந்தத் தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கையின் போது, கடைகளுக்குள் மயங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்ட நபர் ஒருவர் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். ஆனால், அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர். விபத்துக்கான சரியான காரணம் குறித்துக் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in