“ஒருமுறை வா… முக்கியமான விஷயம் பேசிட்டு போயிடுறேன்…” நம்பி வெளியே வந்த இளம்பெண்ணுக்கு நடந்த கொடூரம்..! அலறி அடித்து ஓடிவந்து காதலனை கயிறால் கட்டிய மக்கள்.. ரிசார்ட் வாசலில் அரங்கேறிய பகீர் சம்பவம்..!! – cinefeeds
Connect with us

CRIME

“ஒருமுறை வா… முக்கியமான விஷயம் பேசிட்டு போயிடுறேன்…” நம்பி வெளியே வந்த இளம்பெண்ணுக்கு நடந்த கொடூரம்..! அலறி அடித்து ஓடிவந்து காதலனை கயிறால் கட்டிய மக்கள்.. ரிசார்ட் வாசலில் அரங்கேறிய பகீர் சம்பவம்..!!

Published

on

கேரளாவில் காதலை ஏற்க மறுத்த இளம்பெண்ணைக் கத்தியால் குத்திக்கொலை செய்த வாலிபரை பொதுமக்கள் பிடித்துக் கட்டிப்போட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் குளத்துப்புழா பகுதியைச் சேர்ந்த 20 வயதான தின்ஷா, பத்தனம்திட்டா மாவட்டம் கோழஞ்சேரி அருகே மாராமண் பகுதியில் உள்ள ரிசார்ட் ஒன்றில் வரவேற்பாளராகப் பணியாற்றி வந்தார். கோழஞ்சேரி பகுதியைச் சேர்ந்த 27 வயதான ஜித்து என்பவர் தின்ஷாவை ஒருதலையாகக் காதலித்து வந்துள்ளார். ஆனால் தின்ஷா அவரது காதலை ஏற்க மறுத்தபோதிலும், ஜித்து தொடர்ந்து அவரைப் பின்தொடர்ந்து காதலிக்குமாறு வற்புறுத்தி வந்துள்ளார்.

தனக்குக் கிடைக்காத பெண் வேறு யாருக்கும் கிடைக்கக் கூடாது என்ற எண்ணத்தில் ஜித்து, தின்ஷாவைக் கொலை செய்யத் திட்டமிட்டு கத்தியை மறைத்து வைத்துக்கொண்டு அவர் பணியாற்றிய ரிசார்ட்டுக்குச் சென்றுள்ளார். இனிமேல் தொந்தரவு செய்ய மாட்டேன், “ஒரு முறை மட்டும் வா முக்கியமான விஷயம் பேசிட்டு போயிடுறேன்” எனக் கூறி தின்ஷாவை வெளியே அழைத்து மீண்டும் தன்னைக் காதலிக்குமாறு வற்புறுத்தியுள்ளார். அதற்கு தின்ஷா மறுப்பு தெரிவித்துக் கண்டித்ததால், ஆத்திரமடைந்த ஜித்து தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் தின்ஷாவின் கழுத்தைக் குறிவைத்து சரமாரியாகக் குத்தியுள்ளார்.

Advertisement

இந்த கொடூரத் தாக்குதலில் பலத்த காயமடைந்த தின்ஷா ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அங்கிருந்த பொதுமக்கள், தப்பி ஓட முயன்ற ஜித்துவைப் பிடித்து அவரது கைகளையும் கால்களையும் கயிற்றால் கட்டிப் போட்டனர். தகவலறிந்து வந்த கோழஞ்சேரி காவல்துறையினர், தின்ஷாவின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததுடன், ஜித்துவைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in