LATEST NEWS
“12 வருட ராயல் வாழ்க்கையை தூக்கி எறிஞ்சிட்டு… நண்டு விற்க போன ஏர் ஹோஸ்டஸ்…” காரணம் தெரிந்தால் ஷாக் ஆவீங்க..! வைரலாகும் இளம் பெண்ணின் கதை..!!
12 ஆண்டுகள் விமானப் பணிப்பெண்ணாக வேலை பார்த்த சீனாவுைச் சேர்ந்த சியாவோ சென் என்பவரின் கதை தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. உலகைச் சுற்றிப் பார்க்கும் வாய்ப்பை வழங்கி வந்த தனது கவர்ச்சிகரமான வேலையை விட்டுவிட்டு, தனது சொந்த ஊரான நிங்போவில் உள்ள தாயாரின் நண்டு வியாபாரத்திற்கு உதவ அவர் முடிவெடுத்தார். குடும்பத் தொழிலைப் பெருக்கவும், குடும்பத்தினருக்கு உறுதுணையாக இருக்கவும் யோசிக்காமல் இந்த முடிவை எடுத்த அவர், தற்போது நண்டு வியாபாரத்தின் மூலம் ஒரு நாளைக்கு லட்சக்கணக்கில் சம்பாதித்து வருகிறார்.
விமானப் பணிப்பெண்ணாக பணிபுரிந்தபோது தான் கற்றுக்கொண்ட வாடிக்கையாளர்களிடம் உரையாடும் திறனை, தனது புதிய வியாபார வளர்ச்சிக்கு சென் திறம்படப் பயன்படுத்தினார். சமூக வலைதளங்களில் நண்டுகளைத் தேர்ந்தெடுப்பது முதல் பேக்கிங் செய்வது வரையிலான முழு செயல்முறையையும் சுவாரசியமான சிறிய வீடியோக்களாகப் பதிவிடத் தொடங்கினார். ஒரு காலத்தில் அழகிய சீருடை அணிந்திருந்த சென், இப்போது குளங்களுக்கு அருகே நண்டுகளைக் கையாள்வதும், ஆர்டர்களை பேக் செய்வதுமான காட்சிகளைக் கண்டு மக்கள் மிகவும் ஈர்க்கப்பட்டனர். அவரின் இந்த உழைப்பும் எளிமையும் வியாபாரத்தை உள்ளூர் சந்தையிலிருந்து நாடு முழுமைக்கும் கொண்டு சேர்த்தது.
சீனாவின் பிரபல ‘மத்திய இலையுதிர் காலத்தில்’ நண்டுகளுக்கான தேவை கணிசமாக அதிகரிக்கும் சூழலில், சென்னின் வியாபாரம் அனைத்து சாதனைகளையும் முறியடித்தது. இந்த பண்டிகைக் காலத்தில் அவருடைய ஒரு நாள் விற்பனை 1 லட்சம் யுவானைத் தாண்டியது (அதாவது இந்திய மதிப்பில் சுமார் ரூ.14.45 லட்சம்). அதிக தேவை இருந்தபோதும், தரமான நண்டுகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டபோது, லாபத்திற்காகத் தரத்தைக் குறைக்க விரும்பாத சென், நல்ல தரமான பொருட்கள் கிடைக்கும் வரை குறைவான ஆர்டர்களை மட்டுமே ஏற்றுக்கொள்வேன் என்று உறுதியாகக் கூறினார். இது வாடிக்கையாளர்களின் நம்பிக்கையே தொழிலின் உண்மையான வெற்றி என்பதை வெளிப்படுத்துகிறது.
