LATEST NEWS
#BREAKING:வெளுத்து வாங்கும் கனமழை.. இந்த 4 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை.. வெளியான அதிரடி அறிவிப்பு..!!
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் தொடர் கனமழை எச்சரிக்கை காரணமாக 2026 அக்டோபர் 26 திங்கள்கிழமை அன்று பல்வேறு மாவட்டங்களில் உள்ள கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் கோவை, திண்டுக்கல், ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் விடுமுறை அளித்து உத்தரவிட்டுள்ளனர். மேலும், நீலகிரி மாவட்டத்தில் உள்ள உதகை, கோத்தகிரி, குன்னூர், மற்றும் குந்தா ஆகிய 4 தாலுகாக்களில் உள்ள பள்ளிகளுக்கும் இன்று முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விடுமுறை விடப்பட்டுள்ளது.
இதேபோல், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பிராந்தியங்களிலும் கனமழை எச்சரிக்கையைத் தொடர்ந்து இன்று அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்படுவதாக அம்மாநில கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள தீவிர காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாகப் பரவலாகப் பெய்து வரும் கனமழையால், மாணவர்களின் பாதுகாப்பைக் கருதி இந்த விடுமுறை அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.
