“மரணம் தான் தலைவிதி என்றால் ” – மரண தண்டனைக்கு அஞ்சாமல் டிசம்பரில் வங்கதேசம் திரும்பும் முடிவில் ஷேக் ஹசீனா உறுதி..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“மரணம் தான் தலைவிதி என்றால் ” – மரண தண்டனைக்கு அஞ்சாமல் டிசம்பரில் வங்கதேசம் திரும்பும் முடிவில் ஷேக் ஹசீனா உறுதி..!!

Published

on

வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா, இந்தியாவிலிருந்து தனது நாட்டிற்குத் திரும்பினால் மரண தண்டனை காத்திருக்கிறது என்றபோதிலும், வரவிருக்கும் டிசம்பர் மாதம் டாக்கா திரும்பும் தனது முடிவில் உறுதியாக இருப்பதாகத் தெரிவித்துள்ளார். “மரணம் தான் என் தலைவிதி என்றால், என் சொந்த மண்ணில், என் சொந்த மக்களிடையே நான் இறக்க விரும்புகிறேன்” என்று செய்தி நிறுவனம் ஒன்றின் கேள்விக்கு மின்னஞ்சல் மூலம் அவர் உருக்கமாகப் பதிலளித்துள்ளார்.

கடந்த 2024 ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற வன்முறையான மாணவர் போராட்டத்தைத் தொடர்ந்து, ஷேக் ஹசீனா தலைமையிலான அவாமி லீக் அரசு கவிழ்க்கப்பட்டு, அவர் நாட்டை விட்டு தப்பி இந்தியாவில் தஞ்சம் புகுந்தார். அதன் பின்னர் அங்கு ஏற்பட்ட பல்வேறு அரசியல் மாற்றங்களுக்குப் பிறகு, தற்போதைய தாரிக் ரஹ்மான் தலைமையிலான அரசு அமைந்தது. இதற்கிடையே, போராட்டத்தின் போது மனிதாபிமானத்திற்கு எதிரான குற்றங்களைச் செய்ததாக ஷேக் ஹசீனாவுக்கு வங்கதேச நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளதுடன், அவரை நாடு கடத்தும்படி இந்தியாவிடம் வலியுறுத்தி வருகிறது.

Advertisement

தாம் வங்கதேசம் திரும்பும்போது கைது செய்யப்படலாம், சித்திரவதை செய்யப்படலாம் அல்லது கொல்லப்படலாம் என்ற பேராபத்துகள் இருப்பதை நன்கு அறிந்தே இருப்பதாக ஷேக் ஹசீனா குறிப்பிட்டுள்ளார். இருப்பினும், தனது நாட்டின் மக்கள் அங்கே அனுபவித்து வரும் துன்பங்களை விடுத்து, தூரத்திலிருந்து தன்னால் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது என்பதால் இந்தத் துணிச்சலான முடிவை எடுத்துள்ளதாக அவர் திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in