இந்தியாவிலேயே முதல்முறை: திமுக ஆட்சியில் AI ஊழல்.. போலிப் பெயர்களில் புத்தகங்கள் எழுதி ரூ.50 கோடிக்கு கொள்முதல்.. அமைச்சர் ராஜ்மோகன் அதிரடி குற்றச்சாட்டு..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

இந்தியாவிலேயே முதல்முறை: திமுக ஆட்சியில் AI ஊழல்.. போலிப் பெயர்களில் புத்தகங்கள் எழுதி ரூ.50 கோடிக்கு கொள்முதல்.. அமைச்சர் ராஜ்மோகன் அதிரடி குற்றச்சாட்டு..!!

Published

on

திமுக ஆட்சியில் இந்தியாவின் முதல் ‘AI ஊழல்’ நடந்துள்ளதாகத் தமிழக அரசு மீது மிகக் கடுமையான குற்றச்சாட்டை அமைச்சர் ராஜ்மோகன் சுமத்தியுள்ளார். இந்தியாவில் இதுவரை இல்லாத வகையில், தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி முதன்முறையாக இத்தகைய செயற்கை நுண்ணறிவு ஊழலை திமுக செய்துள்ளதாகச் செய்தியாளர் சந்திப்பில் அவர் ஆவணங்களை உயர்த்திக் காட்டிக் குற்றம் சாட்டினார்.

பெரியார் அறிவுலகம் நூலகப் புத்தகக் கொள்முதல் விவகாரத்தில், ‘அகல்விளக்கு’ பதிப்பகத்திற்குத் திமுக அரசு கொள்முதல் ஆணை வழங்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டார். இதில் அதிர்ச்சியூட்டும் விஷயமாக, போலியான பெயர்களில் AIதொழில்நுட்பம் மூலமாகப் புத்தகங்கள் எழுதப்பட்டு, அதன் வழியே கோடிக்கணக்கான ரூபாய் முறைகேடு செய்யப்பட்டுள்ளது அம்பலமாகியுள்ளதாக அவர் தெரிவித்தார்.

Advertisement

இவ்வாறு போலி எழுத்தாளர்கள் மற்றும் AI மூலம் அவசர அவசரமாக எழுதப்பட்ட புத்தகங்களை, தலா 50 கோடி ரூபாய் என்ற பிரம்மாண்ட தொகையில் பல்வேறு பொது நூலகங்களுக்கு வாங்குவதற்காகத் திமுக அரசு கொள்முதல் ஆணை பிறப்பித்துள்ளது என்று அமைச்சர் ராஜ்மோகன் கடுமையாகச் சாடியுள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in