LATEST NEWS
“வாயில ஏதாச்சும் வந்துடும்..!” பணப் பரிவர்த்தனை ஆதாரத்தை வெளியிடுங்க… பெரியார் அறிவுலக புத்தக ஊழலில் அமைச்சர் ராஜ்மோகனுக்கு திமுக பரந்தாமன் விடுத்த அதிரடி சவால்..!!
பெரியார் அறிவுலகம் புத்தக ஊழல் விவகாரத்தில், திமுக சட்டத்துறை இணைச் செயலாளர் பரந்தாமன், தவெக அரசின் பள்ளி கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகனுக்கு மிகக் கடுமையான சவால் ஒன்றை விடுத்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், “வாயில் ஏதாவது வந்துவிடும்” என்று ஆவேசப்பட்டதோடு, அமைச்சர் ராஜ்மோகனுக்கு உண்மையிலேயே தைரியம் இருந்தால், எந்த தேதியில் பணம் பரிவர்த்தனை செய்யப்பட்டுள்ளது என்ற ஆதாரத்தைப் பொதுவெளியில் வெளியிட வேண்டும் என்று அதிரடியாகக் கேட்டுள்ளார்.
அகல்விளக்கு பதிப்பக விவகாரத்தில் திமுக மீது வீணாகப் பழி சுமத்துவதை ஏற்க முடியாது என்று குறிப்பிட்ட பரந்தாமன், ஆதாரம் இல்லாத வெற்றுப் புகார்களைக் கூறுவதை அமைச்சர் நிறுத்திக் கொள்ள வேண்டும் எனச் சாடினார். குறிப்பிட்ட புத்தகக் கொள்முதலுக்கான நிதிப் பரிமாற்றம் எப்போது, யார் காலத்தில் நடந்தது என்ற உண்மையான வங்கிப் பரிவர்த்தனை விவரங்களை அரசு வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
ஏற்கனவே இந்தத் தொகுதி மறுவரையறை புத்தக சர்ச்சை மற்றும் பெரியார் அறிவுலக நூலக முறைகேடு தொடர்பாக திமுக மற்றும் தவெக இடையே நாளுக்கு நாள் மோதல் முற்றி வரும் நிலையில், பரந்தாமனின் இந்த நேரடி சவால் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போலி எழுத்தாளர்கள் மற்றும் புத்தகக் கொள்முதல் தொடர்பான குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரங்களுடன் தவெக அரசு பதில் சொல்ல வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளதாக திமுக தரப்பு வட்டாரங்கள் தெரிவித்து வருகின்றன.
