“பொதுமக்கள் போட்டா உடனே கைது… தவெக போட்டா அமைதியா..?” RSS-ஐ விட இந்த ஆட்சி மோசமாக செயல்படுகிறது.. கொந்தளித்த திமுக பரந்தாமன்..!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“பொதுமக்கள் போட்டா உடனே கைது… தவெக போட்டா அமைதியா..?” RSS-ஐ விட இந்த ஆட்சி மோசமாக செயல்படுகிறது.. கொந்தளித்த திமுக பரந்தாமன்..!!!

Published

on

த.வெ.க ஆட்சியில் தொடரும் அவலங்களுக்கு எதிராக தி.மு.க மகளிரணி நடத்தும் ஆர்ப்பாட்டம் தொடர்பாக நேற்று திமுக தலைவர் பதிவிட்ட வீடியோவில், அவருடைய குரலை மட்டும் மாற்றி, அவதூறு கருத்துகளை த.வெ.க.வின் அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளப்பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது. அந்த பதிவில், ஸ்டாலின் சார் மனசாட்சி… குறிப்பு : தன் ஆட்சியில் நடந்த அவலங்களை முன்பு ஆட்சியில் இருந்த முன்னாள் முதல்வரே ஒப்புக்கொண்டு பேசினால் எப்படி இருக்கும் என்று சொல்லும், A.I. தொழில்நுட்பத்தால் உருவாக்கப் பட்ட கற்பனைக் காணொளி வெளியிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், திமுக தலைவரை விமர்சித்து தவெக வீடியோ வெளியிட்டது தொடர்பாக சைபர் கிரைமில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக சட்டத்துறை இணை செயலர் பரந்தாமன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

Advertisement

இந்தியாவின் எந்த அரசியல் கட்சியும் செயல்படாத வகையில் தவெக மோசமாக செயல்படுகிறது. திமுக வீடியோ போட்டால் அதை முடக்கி, கைது செய்யும் நடவடிக்கையில் தவெக ஈடுபடுகிறது. பொதுமக்கள் பதிவிட்டால் பாய்ந்து பாய்ந்து நடவடிக்கை எடுக்கிறது காவல் துறை. மற்ற வீடியோக்களை நீக்கும்போது தவெக வெளியிடும் வீடியோக்களை ஏன் முடக்குவதில்லை? திமுகவுக்கு எதிரான அவதூறுகள் மீது நடவடிக்கை இல்லை. ஆர்எஸ்எஸ்-ஐ விட தவெக மோசமாக செயல்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in