“இடுப்பில் துப்பாக்கி, விஜய் பட ஹெல்மெட்” பைக் ரைடு சென்ற இளைஞரால் பரபரப்பு.. “வழக்கம் போல் மௌனமா?” – தவெக அரசைச் சாடும் திமுக பரந்தாமன்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“இடுப்பில் துப்பாக்கி, விஜய் பட ஹெல்மெட்” பைக் ரைடு சென்ற இளைஞரால் பரபரப்பு.. “வழக்கம் போல் மௌனமா?” – தவெக அரசைச் சாடும் திமுக பரந்தாமன்..!!

Published

on

தமிழக முதலமைச்சர் விஜய் புகைப்படத்துடன் கூடிய ஹெல்மெட் அணிந்து, இடுப்பில் துப்பாக்கியுடன் இருசக்கர வாகனத்தில் பயணித்த இளைஞரின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. TN 11 பதிவெண் கொண்ட அந்த வாகனத்தில் சென்ற இளைஞர், தனது இடுப்பில் துப்பாக்கி போன்ற ஒன்றை வைத்திருந்ததை அவருக்குப் பின்னால் காரில் சென்றவர்கள் வீடியோ எடுத்துப் பகிர்ந்துள்ளனர். மேலும், அந்த இளைஞர் தனது சட்டையை இழுத்து அந்தத் துப்பாக்கியை மறைக்க முயன்றதும் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது.

இந்த வீடியோவை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ள திராவிட முன்னேற்றக் கழகத்தின் செய்தித் தொடர்பாளர் பரந்தாமன், இதுகுறித்து தமிழ்நாடு காவல்துறை மற்றும் முதலமைச்சர் விஜய் ஆகியோருக்குக் கடுமையான கேள்விகளை எழுப்பியுள்ளார். இதுகுறித்து மாநில காவல்துறை விளக்கம் அளிக்குமா அல்லது ‘துப்பாக்கி’ படத்தில் நடித்தவரின் ஆட்சி என்பதால் இது துப்பாக்கி கலாச்சாரம் தான் என்பதை ஒப்புக்கொள்ளுமா என அவர் விமர்சித்துள்ளார்.

Advertisement

மேலும், காவல்துறையைத் தன் வசம் வைத்துள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவரும் முதலமைச்சருமான விஜய் இதற்குப் பதிலளிப்பாரா அல்லது வழக்கம் போல் மௌனம் காப்பாரா என்றும் பரந்தாமன் தனது பதிவில் கேள்வி எழுப்பியுள்ளார். இந்தச் சம்பவம் தவெக அரசின் சட்ட ஒழுங்கு பராமரிப்பு குறித்த அரசியல் விவாதங்களை மீண்டும் தீவிரப்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் தவெக அரசு பொறுப்பேற்றதில் இருந்து கொலை, கொள்ளை, வழிப்பறி மற்றும் குழந்தைகள் கடத்தல் போன்ற குற்றச்சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. சில நாட்களுக்கு முன்பு கூட, மாநிலத்தின் தற்போதைய நிர்வாகச் சீர்கேடு மற்றும் சட்ட ஒழுங்கு சீரழிவு குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் மிகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in