“ஒரே ஒரு பீஸ் ரூ. 111..” சர்க்கரையே இல்லாம தங்கத்துல செஞ்ச இனிப்பு… தீபாவளிக்கு ட்ரெண்ட் ஆகும் உலக லெவல் ஸ்வீட்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“ஒரே ஒரு பீஸ் ரூ. 111..” சர்க்கரையே இல்லாம தங்கத்துல செஞ்ச இனிப்பு… தீபாவளிக்கு ட்ரெண்ட் ஆகும் உலக லெவல் ஸ்வீட்..!!

Published

on

நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கொண்டாட்டங்கள் களைகட்டி வரும் நிலையில், ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள இனிப்பகம் ஒன்று தங்கக் காசு வடிவிலான புதிய இனிப்பை அறிமுகம் செய்துள்ளது. ‘அஷர்பி’ என பெயரிடப்பட்டுள்ள இந்த இனிப்பின் ஒரு கிலோ விலை ரூ.1.23 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பாதாம் பருப்பை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்படும் இந்த இனிப்பில், உண்ணக்கூடிய தங்கம் எனப்படும் சுவர்ண பஸ்பம், குங்குமப்பூ, பைன் கொட்டைகள், தேன் உள்ளிட்ட உயர்தர பொருட்கள் சேர்க்கப்படுகின்றன. மேலும், தங்க இலைகளால் இனிப்பு அலங்கரிக்கப்படுகிறது. சர்க்கரை சேர்க்காமல் தயாரிக்கப்படும் இந்த இனிப்பின் எடை 9 கிராம் ஆகும். ஒரு துண்டு ரூ.111-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இந்த இனிப்பை அறிமுகம் செய்துள்ள தியோஹார் நிறுவனத்தின் நிறுவனர் அஞ்சலி ஜெயின் கூறுகையில், தனது மகனின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கான வழிகளைத் தேடியபோது, இந்தியாவின் பாரம்பரிய மருத்துவ முறைகளில் அதற்கான தீர்வுகளைக் கண்டறிந்ததாக தெரிவித்தார். ஆயுர்வேதத்தில் பயன்படுத்தப்படும் சுவர்ண பஸ்பத்தின் மருத்துவ குணங்கள் குறித்து அறிந்த அவர், முதலில் வீட்டில் தயாரித்த லட்டு மற்றும் பாயசத்தில் அதனைச் சேர்த்து பரிசோதனை செய்துள்ளார். இனிப்புகள் உடல்நலத்திற்கு கேடு விளைவிக்கும் என்ற எண்ணத்தை மாற்றும் நோக்கில், கடந்த 2024-ம் ஆண்டு தனது நிறுவனத்தைத் தொடங்கி ஆரோக்கியமான இனிப்புகளை அறிமுகப்படுத்த முடிவு செய்ததாகவும் கூறினார்.

Advertisement

இதற்கிடையே, நவரத்தினக் கற்களை அடிப்படையாகக் கொண்டு 9 வகையான முந்திரி இனிப்புகளையும் இந்த நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. மரகதத்தைக் குறிக்கும் பிஸ்தா சுவையிலான பச்சை நிற இனிப்பு, புஷ்பராகத்தைக் குறிக்கும் குங்குமப்பூ சுவையிலான இனிப்பு, பவளத்தைக் குறிக்கும் ரோஜா சுவையிலான இனிப்பு, மாணிக்கத்தைக் குறிக்கும் ஸ்ட்ராபெரி சுவையிலான இனிப்பு என பல்வேறு வகைகளில் தயாரிக்கப்பட்டுள்ளன. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த வித்தியாசமான இனிப்புகள் வாடிக்கையாளர்களிடையே கவனத்தை ஈர்த்துள்ளன.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in