BIG BREAKING: தமிழ்நாடு அரசு வங்கிக் கணக்குகளில் இருந்து ரூ.22.10 கோடி பணம் திருட்டு.. பெரும் அதிர்ச்சி..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

BIG BREAKING: தமிழ்நாடு அரசு வங்கிக் கணக்குகளில் இருந்து ரூ.22.10 கோடி பணம் திருட்டு.. பெரும் அதிர்ச்சி..!!

Published

on

தமிழக அரசின் ஊரக வளர்ச்சித் துறையின் கீழ் இயங்கும் ஊராட்சி ஒன்றியங்களின் வங்கிக் கணக்குகளில் இருந்து ஆன்லைன் மூலமாக ரூ.22.10 கோடி பணம் திருடப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்திய மற்றும் மாநில அரசுகளின் 15-வது நிதிக்குழு மானியத்தின் கீழ், கிராமப்புறங்களில் தலா ரூ.50 லட்சம் மதிப்பில் சுகாதார நல மையங்கள் கட்ட ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்த நிதியே இவ்வாறு டிஜிட்டல் முறையில் மோசடி செய்யப்பட்டுள்ளது.

சென்னை சைபர் கிரைம் போலீஸார் நடத்திய முதல்கட்ட விசாரணையில், இந்த நூதனத் திருட்டில் நைஜீரிய நாட்டைச் சேர்ந்த சர்வதேச மோசடி கும்பலுக்குத் தொடர்பு இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது. இந்த டிஜிட்டல் கொள்ளையில் ராமேஸ்வரம் மண்டபம் ஊராட்சி ஒன்றியத்தில் இருந்து ரூ.14 கோடியும், தாராபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் இருந்து ரூ.5 கோடியும், நாகப்பட்டினம் ஊராட்சி ஒன்றியத்தில் இருந்து ரூ.3.10 கோடியும் அபேஸ் செய்யப்பட்டுள்ளது கண்டறியப்பட்டு, காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in