“அப்பதான் அம்மாவை கொ***ர்..” மனைவியை துப்பாக்கியால் சுட்டுக் கொ**ற கணவன்..! மகள் சொன்ன பகீர் உண்மை.. தீபாவளி கொண்டாட்டத்தில் நடந்த கொடூர சம்பவம்.!! – cinefeeds
Connect with us

CRIME

“அப்பதான் அம்மாவை கொ***ர்..” மனைவியை துப்பாக்கியால் சுட்டுக் கொ**ற கணவன்..! மகள் சொன்ன பகீர் உண்மை.. தீபாவளி கொண்டாட்டத்தில் நடந்த கொடூர சம்பவம்.!!

Published

on

பீகாரின் ஹாஜிபூரில் தீபாவளி பண்டிகை அன்று இரவு நடந்த குடும்பத் தகராறில், கணவன் தனது மனைவியை சுட்டுக் கொன்ற துயரமான சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தொழில் துறை காவல் நிலையத்திற்குட்பட்ட ராஜ்புத் நகர் காலனியைச் சேர்ந்த ராகேஷ் சௌகான் என்பவர்தான் தனது மனைவி நீலு சிங்கை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிட்டு சம்பவ இடத்திலிருந்து தப்பியோடியுள்ளார்.

கொலை நடந்த போது அருகில் இருந்த தம்பதியினரின் மகள் கிருத்திகா ராஜ்ஜின், நடந்த சம்பவத்தை கண்ணீருடன் விவரித்தார். மாலை 7 மணியளவில் தனது தந்தை வீட்டிற்கு வந்ததாகவும், இரவு உணவு உட்கொள்ளும் போது பெற்றோரிடையே சண்டை தொடங்கியதாகவும் அவர் தெரிவித்தார். சிறிது நேரத்திற்குப் பிறகு வெளியே போய்விட்டு வந்த தந்தை, மகளை வெளி அறையில் போய் தூங்கச் சொல்லியுள்ளார். அதன்பிறகு மீண்டும் பெற்றோரிடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டு, திடீரென துப்பாக்கிச் சூட்டு சத்தம் கேட்டதாகவும், சென்று பார்த்தபோது தனது தாயை தந்தை சுட்டுக் கொன்றிருந்ததை நேரில் பார்த்ததாகவும் மகள் தெரிவித்தார்.

Advertisement

தாயை சுட்டுக் கொன்றதைத் தொடர்ந்து அங்கிருந்து தப்பியோட முயன்ற தந்தை, மகளையும் தன்னுடன் வருமாறு வற்புறுத்தியுள்ளார். ஆனால், சுதாரித்துக் கொண்ட சிறுமி தனது கையை உருவிக்கொண்டு அவர்களுடன் செல்வதை மறுத்துவிட்டார். முதற்கட்ட விசாரணையின்படி குடும்பத் தகராறே இக்கொலைக்குக் காரணம் என்று தெரியவந்திருந்தாலும், காவல்துறையினர் அனைத்து கோணங்களிலும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே, எஸ்பிஓ சுபோத் குமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு, தலைமறைவாகியுள்ள குற்றவாளி ராகேஷ் சௌகானை கைது செய்ய பல்வேறு இடங்களில் தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in