தற்கொலையா..? இல்லை.. விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டவர் மர்ம மரணம்… போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்டால் மொத்த போலீஸ் துறையும் அதிர்ச்சி..! காவல் நிலையத்தில் நடந்தது என்ன..?! – cinefeeds
Connect with us

CRIME

தற்கொலையா..? இல்லை.. விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டவர் மர்ம மரணம்… போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்டால் மொத்த போலீஸ் துறையும் அதிர்ச்சி..! காவல் நிலையத்தில் நடந்தது என்ன..?!

Published

on

தேனி மாவட்டம், தேவாரம் அருகே உள்ள அழகர் நாயக்கன்பட்டியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவர், கடந்த 2ஆம் தேதி தேவாரத்திலிருந்து ஏலக்காய் மூட்டைகளை ஏற்றிக்கொண்டு உசிலம்பட்டி – மதுரை சாலையில் லாரியில் சென்றுகொண்டிருந்தபோது, வாலாந்தூர் அருகே லாரியில் தீ விபத்து ஏற்பட்டு 60 ஏலக்காய் மூட்டைகள் தீக்கிரையாகின. இதுதொடர்பாக அவர் வாலாந்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்த நிலையில், கடந்த 13ஆம் தேதி பாலகிருஷ்ணனை விசாரணைக்காக செக்கானூரணி காவல் நிலையத்திற்குக் காவல் ஆய்வாளர் முத்து அழைத்துச் சென்றுள்ளார். அங்கு இரவு முழுவதும் விசாரணை நடைபெற்ற நிலையில், பாலகிருஷ்ணனைக் காவல் நிலையத்திலேயே அமர வைத்துவிட்டுப் புகார் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளக் காவல் ஆய்வாளர் முத்து மற்றொரு காவலருடன் வெளியே சென்றார்; அப்போது பெண் காவலர் கலைச்செல்வி மற்றும் தலைமைக்காவலர் பழனிவேல் ராஜன் ஆகியோர் பாதுகாப்புப் பணியில் இருந்துள்ளனர்.

இந்நிலையில், கழிவறைக்குச் செல்வதாகக் கூறிவிட்டுச் சென்ற பாலகிருஷ்ணன், காவல் நிலையக் கழிவறையில் தூக்கிட்டு உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார். இதையடுத்து, சம்பவ இடத்திற்கு நேரில் சென்ற மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் தேவநாதன் விசாரணை மேற்கொண்டதுடன், பாலகிருஷ்ணனின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காவல் நிலையத்தில் விசாரணைக்காகச் சென்றவர் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து, இன்ஸ்பெக்டர் உள்பட 3 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்; மேலும், இந்த காவல் நிலைய மரண வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கும் மாற்றி டிஜிபி உத்தரவிட்டார்.

Advertisement

இதற்கிடையே, பாலகிருஷ்ணன் உடலின் பிரேத பரிசோதனை அறிக்கை வெளியாகியுள்ளது. அதில் பாலகிருஷ்ணனின் இடது தோள்பட்டை, வலது நெற்றி, விரல்கள், கழுத்து, வயிறு என உடலில் 5 இடங்களில் காயங்கள் இருந்ததாகத் பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளது. மேலும், உடல் ரசாயன ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ள நிலையில், அதன் முடிவுகள் வந்த பிறகே இறப்புக்கான உண்மையான காரணம் தெரியவரும் என்று கூறப்படுகிறது.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in