LATEST NEWS
“ஒரு எம்எல்ஏ-வுக்கு ரூ.40 கோடி வரை கொடுக்கத் தயார்” ஆட்சியைக் கவிழ்க்க நடக்கும் மெகா குதிரை பேரம் – துரை வைகோ உடைத்த பகீர் ரகசியம்..!!
சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு மக்கள் தீர்ப்பை ஏற்க முடியாமல் மறைமுகக் கூட்டணியை உருவாக்க நினைத்தவர் திமுக தலைவர் என மதிமுக எம்.பி. துரை வைகோ பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஜனநாயக ரீதியாக அமைந்துள்ள தற்போதைய அரசைச் சீர்குலைக்கும் வகையில் திமுக செயல்படுவதாக விமர்சித்துள்ளார்.
மேலும், தற்போதைய அரசைக் கவிழ்ப்பதற்காக மிகப்பெரிய அளவில் குதிரை பேரம் நடைபெற்று வருவதாகத் தான் கேள்விப்பட்டதாக துரை வைகோ அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளார். இதற்காக ஒரு எம்எல்ஏ-விற்கு சுமார் ரூ. 40 கோடி வரை பணம் கொடுக்க அவர்கள் தயாராக இருப்பதாகத் தகவல்கள் வருவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
மக்களின் ஆதரவோடு அமைந்த ஆட்சியைப் பணபலத்தின் மூலம் கவிழ்க்க முயல்வது ஜனநாயகத்திற்கு எதிரானது என துரை வைகோ சாடியுள்ளார். திமுக மீது அவர் சுமத்தியுள்ள இந்த ரூ. 40 கோடி குதிரை பேரக் குற்றச்சாட்டு தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
