“முன்பின் தெரியாதவர்களுடன் செல்லாதீர்கள்” என்ற எச்சரிக்கையை மீறிய பிரேசில் பெண்;… இந்தியாவில் அவருக்கு நடந்தது என்ன? – வைரலாகும் வீடியோ..! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“முன்பின் தெரியாதவர்களுடன் செல்லாதீர்கள்” என்ற எச்சரிக்கையை மீறிய பிரேசில் பெண்;… இந்தியாவில் அவருக்கு நடந்தது என்ன? – வைரலாகும் வீடியோ..!

Published

on

பிரேசில் நாட்டைச் சேர்ந்த நாவிதரான லாரிசா நெரி என்ற பெண்ணின் புகைப்படம், இந்தியாவில் ஹாரியாணா தேர்தல் முறைகேடு புகார்கள் மற்றும் வாக்காளர் அடையாள அட்டை சர்ச்சைகளில் பயன்படுத்தப்பட்டு திடீரென வைரலானது. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இந்த விவகாரத்தை எழுப்பியதைத் தொடர்ந்து, பிரேசிலில் வசிக்கும் அந்தப் பெண்ணின் புகைப்படம் இந்தியாவில் பெரும் விவாதப் பொருளாக மாறியது.

தாம் எப்போதுமே இந்தியாவுக்குச் சென்றதில்லை என்றும், ராகுல் காந்தி யார் என்றுகூட தனக்குத் தெரியாது என்றும் லாரிசா நெரி என்டிடிவி ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார். தனது புகைப்படம் ஸ்டாக் ஃபோட்டோ இணையதளங்களில் இருந்து தவறாக எடுக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டுள்ளதை அறிந்த அவர், முதலில் இது ஒரு செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்ட போலியான ஜோக் அல்லது ஏமாற்று வேலை என்று நினைத்ததாகக் கூறினார்.

Advertisement

இந்தச் சம்பவம் குறித்து அதிர்ச்சியடைந்த அவர், தனது அனுமதியின்றி தனது படத்தை அரசியல் விவகாரங்களில் பயன்படுத்தியது குறித்து வழக்கறிஞருடன் பேசி வருவதாகவும், இது தனக்கு மிகுந்த மன உளைச்சலைத் தந்ததாகவும் குறிப்பிட்டார். மேலும், தான் ஒரு மாடல் கிடையாது என்றும், பிரேசிலில் சாதாரண அழகுக்கலை நிபுணராகப் பணிபுரிந்து வருவதாகவும் அவர் தெளிவுபடுத்தினார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in