“எங்களை யாரும் கட்டாயப்படுத்த முடியாது..” ராகுல் காந்தி அழைப்பை ஸ்டாலின் ஏற்க மறுத்தாரா..? தீயாய் பரவும் வதந்திக்கு ஆர்.எஸ்.பாரதி வைத்த செக்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“எங்களை யாரும் கட்டாயப்படுத்த முடியாது..” ராகுல் காந்தி அழைப்பை ஸ்டாலின் ஏற்க மறுத்தாரா..? தீயாய் பரவும் வதந்திக்கு ஆர்.எஸ்.பாரதி வைத்த செக்..!!

Published

on

காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியின் சுயசரிதை நூல் வெளியீட்டு விழாவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை அழைக்க ராகுல் காந்தி முயன்றதாகவும், குறிப்பிட்ட நாளில் வேறு பணிகள் இருப்பதாக ஸ்டாலின் தரப்பில் தெரிவிக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாயின. மேலும், சோனியாவுக்கு மு.க.ஸ்டாலின் ஒரு வாழ்த்துச் செய்தி கூட அனுப்பவில்லை என்றும் பரவலாக செய்திகள் பரவின.

இந்நிலையில், சோனியா புத்தக வெளியீட்டு விழாவில் ராகுலின் தொலைபேசி அழைப்பை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஏற்க மறுத்தாரா எனும் செய்தியாளர்களின் கேள்விக்கு திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி விளக்கம் அளித்தார். சோனியா காந்திக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மீது மிகப்பெரிய மரியாதை இருப்பதாகவும், நாங்களும் அவரை மதிக்கிறோம் என்றும் அவர் தெரிவித்தார்.

Advertisement

மேலும் பேசிய அவர், சோனியா காந்தியின் சுயசரிதை புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்க மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு வந்திருக்கலாம் என்றும் அதுபற்றி தனக்குத் தெரியவில்லை என்றும் குறிப்பிட்டார். ஆனாலும், அந்த அழைப்பை ஏற்பதா, வேண்டாமா என்பதை முடிவு செய்ய எங்களை யாரும் கட்டாயப்படுத்த முடியாது என்றும் ஆர்.எஸ்.பாரதி விளக்கமளித்தார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in