“காவலருடன் கள்ளக்காதல்..” கணவரைக் கொல்ல ரூ.6 லட்சம் கொடுத்துக் கூலிப்படையை ஏவிய மனைவி.. கடைசியில் நடந்த ட்விஸ்ட்.. திடுக்கிடும் பின்னணி..!! – cinefeeds
Connect with us

CRIME

“காவலருடன் கள்ளக்காதல்..” கணவரைக் கொல்ல ரூ.6 லட்சம் கொடுத்துக் கூலிப்படையை ஏவிய மனைவி.. கடைசியில் நடந்த ட்விஸ்ட்.. திடுக்கிடும் பின்னணி..!!

Published

on

காவலர் ஒருவருடன் ஏற்பட்ட கள்ளக்காதல் காரணமாக, வங்கி மேலாளரான தனது கணவரைக் கொலை செய்வதற்காக மனைவியே ரூ.6 லட்சம் கொடுத்துக் கூலிப்படையை ஏவிய அதிர்ச்சிச் சம்பவம் உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் நிகழ்ந்துள்ளது. வங்கி மேலாளர் அனுராக் சுக்லாவின் மனைவி ஆஷி மிஸ்ரா, நிதின் ராணா என்ற காவலருடன் தீவிர காதலில் இருந்துள்ளார். தங்கள் காதலுக்கு இடையூறாக இருக்கும் கணவரைத் தீர்த்துக்கட்டத் திட்டமிட்ட ஆஷி மிஸ்ரா, அதற்காகக் காவலர் நிதின் ராணாவுடன் சேர்ந்து ரூ.6 லட்சத்திற்குத் தேடப்படும் கூலிப்படையினரை ஏற்பாடு செய்துள்ளார். திட்டப்படி, கணவர் அனுராக் சுக்லா இருக்கும் இடத்தை மனைவி ஆஷி மிஸ்ரா தனது காதலனுக்குப் பகிர்ந்துள்ளார்.

இதையடுத்து அங்கு வந்த கூலிப்படையினர், அனுராக் சுக்லாவை நோக்கிச் சரமாரியாகத் துப்பாக்கியால் சுட்டுள்ளனர். ஆனால், தீவிர ஆஞ்சநேயர் பக்தரான அனுராக் சுக்லா, பல தோட்டாக்கள் பாய்ந்த நிலையிலும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இந்தச் சம்பவம் குறித்துத் தீவிர விசாரணை நடத்திய லக்னோ காவல்துறையினர், சதித்திட்டம் தீட்டிய மனைவி ஆஷி மிஸ்ரா, அவரது காதலன் காவலர் நிதின் ராணா மற்றும் கூலிப்படையினரான மயங்க், சுபம், அங்கித், சிவம் ஜாட் ஆகிய 6 பேரையும் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், இவர்கள் அனைவரும் சிறையில் அடைக்கப்பட உள்ளனர்.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in