LATEST NEWS
“அப்பா இல்லாம என்னால இருக்க முடியல..” தந்தை இறந்த அதே இடத்தில் மகள் எடுத்த விபரீத முடிவு.. நெஞ்சை கலங்க வைக்கும் பின்னணி..!!
திருப்பூர் செம்மாண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்த எந்திர பிட்டரான கார்த்திக் (39) மற்றும் அப்பகுதியிலுள்ள தனியார் பள்ளி ஆசிரியை ஜானகி (37) தம்பதியின் மகள் சாதனா (16). வீட்டிலிருந்து 2 கிலோமீட்டர் தொலைவில், தாய் பணிபுரியும் அதே பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்த சாதனா, தினமும் வீட்டிற்கு அருகிலுள்ள தண்டவாளத்தைக் கடந்து பள்ளிக்குச் சென்று வந்தார்.
தந்தை மீது அளவுகடந்த பாசம் கொண்டிருந்த சாதனாவை, கார்த்திக் தினமும் தண்டவாளத்தைக் கடந்து பள்ளியில் விட்டுச் செல்வது வழக்கம்; அதன்படி கடந்த ஜூன் 17-ஆம் தேதி மகளைப் பள்ளியில் விட்டுவிட்டுத் தண்டவாளத்தைக் கடக்க முயன்றபோது ரெயிலில் அடிபட்டுக் கார்த்திக் உயிரிழந்தார். தந்தையின் மறைவுக்குப் பிறகு மிகவும் சோர்வாக இருந்த சாதனா, “எனது அப்பா இல்லாமல் என்னால் இருக்க முடியவில்லை” என்று சக மாணவிகளிடம் அடிக்கடி கூறி வந்த நிலையில், மாணவிகளும் ஆசிரியர்களும் அவரைத் தேற்றி வந்தனர்.
இந்த நிலையில், நேற்று முன்தினம் மாலை பள்ளி முடிந்து தண்டவாளம் அருகே வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, புதுடெல்லியிலிருந்து திருவனந்தபுரம் நோக்கிச் சென்ற ரெயில் முன் சாதனா திடீரெனப் பாய்ந்து பரிதாபமாக உயிரிழந்தார். தந்தை ரெயிலில் அடிபட்டு இறந்த இடத்தின் அருகிலேயே அவர் தற்கொலை செய்து கொண்டது விசாரணையில் தெரிய வந்த நிலையில், திருப்பூர் ரெயில்வே போலீசார் உடலை மீட்டுப் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து, பின்னர் குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனர்; இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
