LATEST NEWS
“இப்படி ஒரு முதலாளியா..?” தவறுதலாக 5 கம்ப்யூட்டர்களை உடைத்த பெண்… சிசிடிவியைப் பார்த்து ஓனர் எடுத்த நெகிழ்ச்சி முடிவு..!!
சீனாவில் உள்ள இணைய மையம் ஒன்றில் பணிபுரிந்து வந்த பெண் தூய்மைப் பணியாளர் ஒருவர், சுத்தம் செய்யும் பணியின்போது தவறுதலாக 5 கணினிகள் மற்றும் மானிட்டர்களைத் தட்டிவிட்டு உடைத்துவிட்டார். இதனால் பல ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்த நிலையில், தனது சிறிய கவனக்குறைவால் வேலையும் போய், நஷ்ட ஈடும் கட்ட வேண்டிய நிலை ஏற்பட்டுவிட்டதே என அந்தப் பெண் கலங்கினார். இருப்பினும், நடந்த தவறுக்குத் தானே முழுப் பொறுப்பேற்பதாகவும், சேதமடைந்த கணினிகளுக்கான பணத்தைத் தானே கட்டிவிடுவதாகவும் உரிமையாளரிடம் நேர்மையாகத் தெரிவித்துள்ளார்.
ஆனால், அந்த இணைய மையத்தின் உரிமையாளர் உடனடியாகக் கோபப்படாமல் அங்கிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது, விபத்திற்கான உண்மையான காரணம் வேறு என்பது தெரியவந்தது. கணினிகள் வைக்கப்பட்டிருந்த மேசை சரியாகப் பொருத்தப்படாமல் இருந்ததே அவை சரிந்து விழுவதற்குக் காரணம் என்பதை உணர்ந்த உரிமையாளர், அந்தப் பெண்ணைச் சற்றும் குறை கூறாமல், மாறாக அவருக்கு நன்றி தெரிவித்துவிட்டு உடனடியாக அந்த மேசையைச் சரிசெய்ய உத்தரவிட்டார். ஒரு தவறு நடக்கும்போது மற்றவர்கள் மீது பழிபோடுவது எளிது; ஆனால் உண்மையை அறிந்த பிறகு மனிதநேயத்துடன் நடந்துகொள்ளும் இந்த உரிமையாளரின் செயல் அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளது.
