LATEST NEWS
அய்யோ… “தீபாவளிக்கு ஆசையாய் வாங்கிய புது டிராக்டர்..” கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த விபரீதம்.. ஒரே மகனுடன் தந்தை பலி..! கலங்க வைக்கும் பின்னணி..!!
மத்தியப் பிரதேச மாநிலம் சத்தர்பூர் மாவட்டத்தில் நடந்த மிகவும் சோகமான விபத்தில், நிலத்தை உழுது கொண்டிருந்தபோது டிராக்டர் சமநிலை இழந்து வயலில் உள்ள கிணற்றுக்குள் விழுந்ததில் தந்தையும் 10 வயது மகனும் உயிரிழந்தனர். தீபாவளி பண்டிகையின் போது குடும்பத்தினர் வாங்கிய புதிய டிராக்டரால் நிலத்தை உழுது கொண்டிருந்தபோது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இச்சம்பவத்தால் அப்பகுதி முழுவதும் பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளது.
சத்தர்பூர் ஓர்ச்சா ரோடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஹத்னா கிராமத்தில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. தந்தை தனது 10 வயது ஒரே மகனுடன் புதிய டிராக்டரால் நிலத்தை உழுது கொண்டிருந்தபோது, திடீரென டிராக்டரின் சமநிலை தவறியுள்ளது. இருவரும் சுதாரிப்பதற்குள் டிராக்டருடன் சேர்ந்து நிலத்தில் இருந்த கிணற்றுக்குள் விழுந்தனர்; விபத்து மிக வேகமாக நடந்ததால் அவர்களால் தப்பிக்க முடியவில்லை. அங்கிருந்த கிராம மக்கள் உடனடியாக ஓடி வந்து காப்பாற்ற முயன்றபோதும், டிராக்டர் விழுந்ததாலும் கிணற்றில் தண்ணீர் ஆழமாக இருந்ததாலும் அவர்களை மீட்க முடியாமல் போனது.
தகவல் அறிந்து வந்த ஓர்ச்சா ரோடு காவல்துறையினரும் SDERF குழுவினரும் நீண்ட நேரம் போராடி, இருவரின் சடலங்களையும் டிராக்டரையும் கிணற்றிலிருந்து வெளியே எடுத்தனர். தந்தை மற்றும் 10 வயது ஒரே மகனின் இறப்புச் செய்தி கேட்டு குடும்பத்தினர் கதறி அழுதனர்; தீபாவளியன்று மகிழ்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் அடையாளமாக வாங்கிய புதிய டிராக்டரே விபத்துக்குக் காரணமாகிவிட்டது. சடலங்களைக் கைப்பற்றிய காவல்துறையினர் உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்து, விபத்துக்கான உண்மையான காரணங்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
