இந்திய நம்பர்தான்… ஆனா.. ராணுவ வீரர்கள் குரூப்பில் ‘சைலன்ட்’ ஆக நுழைந்த பாக். உளவாளிகள்! அம்பலமான பகீர் பின்னணி..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

இந்திய நம்பர்தான்… ஆனா.. ராணுவ வீரர்கள் குரூப்பில் ‘சைலன்ட்’ ஆக நுழைந்த பாக். உளவாளிகள்! அம்பலமான பகீர் பின்னணி..!!

Published

on

இந்திய பாதுகாப்புத்துறை மற்றும் துணை ராணுவப் படையினரின் வாட்ஸ்அப் குழுக்களில் பாகிஸ்தான் உளவாளிகள் ஊடுருவியிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. போலியான இந்திய மொபைல் எண்கள் மூலம் இந்த ஊடுருவல் நடத்தப்பட்டதாகக் கூறப்படும் நிலையில், சுமார் 50 வாட்ஸ்அப் குழுக்கள் கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளன.

கடந்த 3 மாதங்களாக உளவுத்துறை விசாரணை நடைபெற்று வரும் சூழலில், தற்போது நாடு முழுவதும் பாதுகாப்புத் தணிக்கை தொடங்கப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக, வாட்ஸ்அப் குழுக்களில் உள்ள சந்தேகத்திற்குரிய உறுப்பினர்களை நீக்குமாறும், குழு தொடர்பான விவரங்களைச் சமர்ப்பிக்குமாறும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Advertisement

பாதுகாப்புப் படைகளின் தகவல் தொடர்புகளில் ஏற்படக்கூடிய இத்தகைய ஊடுருவல்களைத் தடுக்கும் வகையில் தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in