LATEST NEWS
“அடச்சீ.. பள்ளிக்குள்ளேயே இப்படியா..?” ஆசிரியர் அறையில் வீசப்பட்ட மனிதக்கழிவு.. தலைமை ஆசிரியர் உட்பட 3 பேருக்கு விழுந்த அதிரடி நடவடிக்கை..!!
அரியலூர் மாவட்டம் கீழவெளி அரசுப் பள்ளியில் உள்ள ஆசிரியர் அறையில் மனிதக்கழிவு வீசப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அப்பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்களிடையே சாதியப் பாகுபாடு நிலவியதாகக் குற்றச்சாட்டுகளும் புகார்களும் எழுந்துள்ளன.
இந்தச் சம்பவம் குறித்துக் கல்வித்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையின் அடிப்படையில், பள்ளித் தலைமை ஆசிரியர் உட்பட மொத்தம் 3 பேரைப் பணியிட மாற்றம் செய்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இதனிடையே, பள்ளியின் ஆசிரியர் அறையில் மனிதக்கழிவு வீசப்பட்ட விவகாரத்தில் தொடர்புடைய நபரை உடனடியாகக் கைது செய்யக் கோரி விசிகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
