விவசாயிகளுக்கு முக்கிய எச்சரிக்கை.. 30-ஆம் தேதிக்குள் இதைச் செய்தால் மட்டுமே புதிய கடன்.. தமிழக அரசு வெளியிட்ட அதிரடி அரசாணை..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

விவசாயிகளுக்கு முக்கிய எச்சரிக்கை.. 30-ஆம் தேதிக்குள் இதைச் செய்தால் மட்டுமே புதிய கடன்.. தமிழக அரசு வெளியிட்ட அதிரடி அரசாணை..!!

Published

on

தமிழகத்தில் விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு, நடப்பாண்டில் இதுவரை 5 லட்சத்து 70 ஆயிரத்து 942 விவசாயிகளுக்கு மொத்தம் ரூ.5 ஆயிரத்து 190 கோடி அளவிற்குப் பயிர்க்கடன் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஏற்கனவே பயிர்க்கடன் பெற்றுள்ள விவசாயிகள் தங்களது கடன் தள்ளுபடித் தொகை போக மீதமுள்ள நிலுவைக் கடன் தொகையை வரும் 30-ஆம் தேதிக்குள் முழுமையாகத் திருப்பிச் செலுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அவ்வாறு நிலுவைத் தொகையைச் செலுத்தும் விவசாயிகளுக்கு உடனடியாகப் புதிய பயிர்க்கடன்கள் வழங்கப்படும் என்றும், இதற்கான அதிகாரப்பூர்வ அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாகவும் கூட்டுறவுத்துறை தெரிவித்துள்ளது.

விவசாயிகள் வரும் 30-ஆம் தேதிக்குள் எவ்வித சிரமமுமின்றித் தங்களது நிலுவைத் தொகையைச் செலுத்திப் புதிய கடன்களைப் பெறுவதற்கு ஏதுவாகச் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, வரும் 28 மற்றும் 29-ஆம் தேதிகளான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய வார விடுமுறை நாட்களிலும் மாநிலம் முழுவதும் உள்ள கூட்டுறவுக் கடன் வழங்கும் சங்கங்கள் வழக்கம்போலச் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, விவசாயிகள் இந்த இரண்டு விடுமுறை நாட்களையும் தவறாமல் பயன்படுத்திப் புதிய பயிர்க்கடன்களைப் பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

Advertisement

இந்த அரசாணை மற்றும் புதிய பயிர்க்கடன் பெறுவதற்கான நடைமுறைகள் குறித்துக் கூடுதல் விவரங்களை அறிய விரும்பும் விவசாயிகள், அந்தந்த மாவட்டத்தில் உள்ள கூட்டுறவுச் சங்கங்களின் இணைப் பதிவாளர்களை நேரில் அல்லது தொலைபேசி வாயிலாகத் தொடர்பு கொள்ளலாம். மேலும், விவசாயிகளின் சந்தேகங்களுக்கு உடனுக்குடன் விளக்கம் அளிக்கும் வகையில் பிரத்யேக வாட்ஸ்அப் உதவி எண்ணும் அறிவிக்கப்பட்டுள்ளது; அதன்படி 98400 65423 என்ற வாட்ஸ்அப் எண்ணைத் தொடர்பு கொண்டு தேவையான அனைத்துத் தகவல்களையும் பெற்றுக் கொள்ளலாம் எனக் கூட்டுறவுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in