அடேங்கப்பா.. ஒரு குதிரைக்கு 71 லட்சம் ரூபாயா…?! 30 மாச குதிரையை வாங்க குவிந்த கூட்டம்… ஆனா ஓனர் சொன்ன பதில் தான் ஹைலைட்டே..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

அடேங்கப்பா.. ஒரு குதிரைக்கு 71 லட்சம் ரூபாயா…?! 30 மாச குதிரையை வாங்க குவிந்த கூட்டம்… ஆனா ஓனர் சொன்ன பதில் தான் ஹைலைட்டே..!!

Published

on

உத்தரப் பிரதேச மாநிலம் ஹாபூர் மாவட்டத்தில் நடைபெற்று வரும் புகழ்பெற்ற கங்கா கார்த்திக் திருவிழாவில், வெறும் 30 மாதங்களே ஆன ஒரு குதிரைக்கு 71 லட்சம் ரூபாய் விலை பேசப்பட்ட சம்பவம் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்தக் குதிரை நுக்கரா இனத்தைச் சேர்ந்தது. திருவிழாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் குதிரையின் சிறப்பான செயல்பாட்டைப் பார்த்து வியந்த ஒருவர், அதனை வாங்குவதற்காக 71 லட்சம் ரூபாய் வரை விலை கொடுக்க முன்வந்துள்ளார்.

இந்தக் குதிரையின் உரிமையாளர் நீட்டு சௌத்ரி. இவர் தனது குதிரையை கங்கா கார்த்திக் திருவிழாவில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு அழைத்து வந்துள்ளார். அங்கு அதன் தோற்றம், உடல்வாகு மற்றும் நடை ஆகியவை பார்வையாளர்களைக் கவர்ந்துள்ளன. இதனால் அந்தக் குதிரையைக் காண்பதற்காகத் திருவிழாவுக்கு வந்த பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர். குறிப்பாக, அதன் வயது வெறும் 30 மாதங்கள்தான் என்பது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

குதிரையின் செயல்பாட்டால் ஈர்க்கப்பட்ட ஒருவர், அதனை வாங்குவதற்காக 71 லட்சம் ரூபாய் விலை பேசியுள்ளார். பொதுவாக இவ்வளவு பெரிய தொகை கிடைத்தால் யாரும் விற்பனை செய்ய முன்வரலாம். ஆனால், குதிரையின் உரிமையாளர் நீட்டு சௌத்ரி அந்த வாய்ப்பை ஏற்க மறுத்துவிட்டார். எவ்வளவு பணம் கொடுத்தாலும் தனது குதிரையை விற்க விரும்பவில்லை என்றும், அது விற்பனைக்கு இல்லை என்றும் அவர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

ஹாபூர் மாவட்டத்தின் கர் முக்தேஷ்வர் பகுதியில் நடைபெறும் இந்தக் கால்நடைச் சந்தை பல நூற்றாண்டுகளாகப் புகழ்பெற்று விளங்கி வருகிறது. இந்தச் சந்தைக்கு நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் குதிரைகள் மற்றும் கழுதைகளை வளர்ப்பவர்கள், வாங்குபவர்கள் எனப் பலர் வருகை தருகின்றனர். இந்த ஆண்டு 71 லட்சம் ரூபாய் விலை பேசப்பட்ட 30 மாத நுக்கரா குதிரை திருவிழாவின் முக்கியக் கவன ஈர்ப்பாக மாறியுள்ளது. இவ்வளவு பெரிய தொகை கிடைத்தும் குதிரையை விற்க மறுத்த உரிமையாளரின் முடிவும் தற்போது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in