“ஒருவருக்கு 3 மனுக்களா?” ராஜஸ்தான் அரசியலில் பரபரப்பைக் கிளப்பிய பெண் வேட்பாளரின் நூதன வியூகம்… ராஜஸ்தான் உள்ளாட்சித் தேர்தலில் அரங்கேறிய மெகா ட்விஸ்ட்….!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“ஒருவருக்கு 3 மனுக்களா?” ராஜஸ்தான் அரசியலில் பரபரப்பைக் கிளப்பிய பெண் வேட்பாளரின் நூதன வியூகம்… ராஜஸ்தான் உள்ளாட்சித் தேர்தலில் அரங்கேறிய மெகா ட்விஸ்ட்….!!

Published

on

ராஜஸ்தான் மாநிலத்தின் டீக் மாவட்டம், பிரிஜ் நகர் பஞ்சாயத்து சமிதி பகுதியில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் வதி குமாரி என்ற பெண் வித்தியாசமான தேர்தல் வியூகத்தைக் கையாண்டுள்ளார். ஒரே பஞ்சாயத்து வார்டு இடத்தில் போட்டியிடுவதற்காக இவர் காங்கிரஸ், பாஜக மற்றும் சுயேட்சை என மூன்று முறை வேட்புமனுக்களைத் தாக்கல் செய்தது கவனம் பெற்றுள்ளது.

வேட்புமனு தாக்கல் செய்த ஒவ்வொரு முறையும் அவர் வெவ்வேறு உடைகளில் வந்தது கூடுதல் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது. முதல் முறை சேலை அணிந்தும், இரண்டாவது முறை சல்வார் சூட் அணிந்தும் வந்து மனு தாக்கல் செய்துள்ளார். ஏதேனும் ஒரு கட்சியின் வேட்புமனு தொழில்நுட்பக் காரணங்களால் நிராகரிக்கப்பட்டால், மாற்று வாய்ப்பு இருக்க வேண்டும் என்பதற்காகவே அவர் இவ்வாறு செய்ததாகக் கூறப்படுகிறது.

Advertisement

இறுதியில், வார்டு எண் 14-ல் சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிட்டு வதி குமாரி வெற்றி பெற்றுள்ளார்; மேலும் பாஜகவும் அவருக்கு ஆதரவு தெரிவித்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஒரே நபர் நான்கு வேட்புமனுக்கள் வரை தாக்கல் செய்ய சட்டத்தில் இடமிருந்தாலும், ஒரே பெண்ணின் இந்த வித்தியாசமான முயற்சியும் வெற்றியும் ராஜஸ்தான் அரசியலில் பேசுபொருளாக மாறியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in