LATEST NEWS
CM சார்.! Just a Reminder: நீங்க கைது பண்ணல… நாங்க கைது பண்ண வெச்சோம்… எடப்பாடி பழனிச்சாமி காட்டம்..!!
கள்ளக்குறிச்சி தொகுதி தமிழக வெற்றிக் கழக சட்டமன்ற உறுப்பினர் சி. அருள் விக்னேஷ் கைது செய்யப்பட்டிருப்பது அதிமுகவின் தொடர் போராட்டத்திற்குக் கிடைத்த மாபெரும் வெற்றி என முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இது குறித்து வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், முதலமைச்சர் விஜய்யை நேரடியாகச் சாடியுள்ள அவர், “விஜய்… Just a Reminder: நீங்க கைது பண்ணல… நாங்க கைது பண்ண வெச்சோம்” எனக் காட்டமாகக் குறிப்பிட்டுள்ளார்.
பெண் ஐஏஎஸ் அதிகாரிக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய விவகாரத்தில் புகார் அளிக்கப்பட்டுப் பல நாட்கள் ஆகியும் அரசு நடவடிக்கை எடுக்காமல் தாமதித்ததாக எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். மேலும், இந்த வழக்கில் “அப்படி ஒன்று நடக்கவே இல்லை” என்று வதந்தி பரப்பிப் பொய் சொன்னவர் மீதும், அவரைப் பொய் சொல்ல வைத்தவர் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படுவதை அதிமுக உறுதி செய்யும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
இந்தக் குற்றச்சம்பவத்தை மறைப்பதற்காக பல்வேறு அடக்குமுறைகளுக்கு உள்ளாக்கப்பட்ட சம்பந்தப்பட்ட பெண் அதிகாரிக்கு உரிய நீதி கிடைப்பதைத் தங்கள் கட்சி உறுதி செய்யும் என்றும் எடப்பாடி பழனிசாமி தனது பதிவில் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
